Connect with us

எனக்கு புது phone வாங்கி தந்தாரு.. ஆனா மறுநாள் நான் கால் பண்ணா எடுக்கல.. எமோஷனலான பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் ஷக்தி..

CINEMA

எனக்கு புது phone வாங்கி தந்தாரு.. ஆனா மறுநாள் நான் கால் பண்ணா எடுக்கல.. எமோஷனலான பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் ஷக்தி..

முன்னணி நடிகரான வாழும் மகேந்திரா சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் வேலை பார்த்துள்ளார். இயக்குனராக மட்டுமில்லாமல் எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், எடிட்டர் என பன்முக திறமை கொண்டவர். பாலு மஹிந்திராவின் படங்கள் இன்றும் காலத்தால் அழியாத காவியமாக உள்ளது. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் பாலுமகேந்திரா வென்றுள்ளார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான சறுக்கல்கள் இருந்தது. முதலில் பாலு மகேந்திரா அகிலாவை திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து நடிகை சோபாவை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் நடிகை மோனிகாவுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனார்களாக வளம் வரும் பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி ஆகியோர் முதலில் பாலு மகேந்திராவிடம் தான் உதவி இயக்குனர்களாக வேலை பார்த்தனர். பாலு மகேந்திரா அகிலா தம்பதியினருக்கு சங்கி என்ற மகன் உள்ளார். பின்னர் சக்தி என்ற பெண்ணை தத்தெடுத்து பாலு மகேந்திரா வளர்த்து வந்தார். அந்தப் பெண் மீது பாலுமகேந்திரா அதீத பாசம் வைத்திருந்தார். ஒருமுறை பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் சக்தி அளித்த பேட்டியில் கூறியதாவது, 2010 ஆம் ஆண்டில் இருந்து அப்பா இறக்கும் வரை நான் அவருடன் தான் இருந்தேன்.

   

 

அந்த சமயத்தில் எனக்கு 11 வயது. அவர் என்னை நன்றாக பார்த்துக் கொண்டார். அதையும் நிறைய பேர் தப்பா பேசினார்கள். எங்களுடைய உறவை யாருக்குமே புரிய வைக்கணும் என்று அவசியம் இல்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு நான் வேலைக்கு சென்று வந்ததால் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் தான் அப்பாவை பார்க்க முடியும். ஒரு நாள் அவர் என்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு வா வெளியே போகலாம் என அழைத்துச் சென்றார். நாங்கள் ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டோம். அதன் பிறகு அருகில் இருக்கும் மொபைல் கடைக்கு சென்று எனக்கு போன் வாங்கி கொடுத்தார். முன்னதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் அப்பாவிடம் எனக்கு செல்போன் வாங்கி தாங்க என கேட்டேன். அவர் ஒரு மாதம் கழித்து வாங்கி தருகிறேன் என கூறினார்.

அந்த கடைக்கு சென்றவுடன் உனக்கு பிடித்த மொபைலை எடுத்துக் கொள் என கூறினார். எனக்கு அது பற்றி தெரியாது என்பதால் நீங்களே எடுத்து தாருங்கள் என கூறினேன். அவரும் ஒரு மொபைல் வாங்கி சிம் போட்டு கொடுத்தார். பின்னர் என்னை வேலை பார்க்கும் இடத்திற்கு அழைத்து விட்டார். அப்போது நீ யாரையும் நம்பாதே. உனக்கு பிடித்ததை செய். யார் என்ன கூறினாலும் கண்டுகொள்ளாதே. நான் எப்போதும் உன்னுடன் இருக்கிறேன். உன்னை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன். எதற்கும் கவலைப்படாதே என கூறினார். அப்போது அதனை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கமாக இரவு நேரங்களில் அப்பாவிடம் இருந்து கால் வரும்.

ஆனால் அன்று வரவில்லை நான் அழைத்தபோதும் அதனை அவர் ஏற்கவில்லை. மறுநாள் காலை அப்பாவை தொடர்பு கொண்டேன் அப்போதும் அவர் எடுக்கவில்லை. பின்னர் கார் டிரைவர் மூலமாக அப்பா இறந்தது தெரியவந்தது. அதனை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என எமோஷனலாக பேசி உள்ளார்.

author avatar
Archana
Continue Reading
To Top