Categories: சினிமா

இளையராஜாவை விட்டுட்டு ஒரே ஒரு படம் ரஹ்மானோடு வேலை செய்யுங்கள்… ஆசையாகக் கேட்ட மௌனிகாவுக்கு பாலு மகேந்திராவின் பதில் இதுதான்!

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான பாணியால் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு இரண்டிலும் முத்திரை பதித்தவர் இயக்குனர் பாலு மகேந்திரா. அவர் இயக்கிய வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷமாக உள்ளன.

பாலு மகேந்திராவின் படங்களில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வெகு சிறப்பாக அமைந்திருக்கும். அவர் தன்னுடைய மொத்த சினிமா வாழ்க்கையில் சலீல் சௌத்ரி மற்றும் இளையராஜா ஆகிய இருவரோடு மட்டுமே பணியாற்றியுள்ளார். மூடுபனியில் ஆரம்பித்த பாலு மகேந்திரா மற்றும் இளையராஜா கூட்டணி அவரின் கடைசி படமான தலைமுறைகள் வரை நீடித்தது.

இந்நிலையில் பாலு மகேந்திராவின் இரண்டாவது மனைவியான மௌனிகா பாலு மகேந்திரா- இளையராஜா நட்பைப் பற்றி பேசியுள்ளார். ஒரு நேர்காணலில் “பாலு மகேந்திரா ஒரு நாளைக்கு ஒரு தடவையாவது கமல்ஹாசன், பாரதிராஜா மற்றும் இளையராஜா பற்றி பேசாமல் இருக்கமாட்டார். திடீரென்று பேசிக்கொண்டிருக்கும் போதே ‘நான் போய் இளையராஜாவை போய் பார்த்துவிட்டு வருகிறேன்’ எனக் கூறி சென்று விடுவார்.

நான் ஒரு முறை அவரிடம் ஆசையாக ஒரே ஒரு முறைய ரஹ்மானோடு ஒரு படம் பண்ணுங்கள் எனக் கூறினேன். அதற்கு அவர் ‘ரஹ்மான் நல்ல இசையமைப்பாளர்தான். நல்ல பையன். ஆனால் நான் இளையராஜாவோடு ஆரம்பித்தேன். அவரோடே இன்னும் சில படங்கள் பண்ணிவிட்டு போய் விடுகிறேன் என சொல்லிவிடுவார்.” எனக் கூறியுள்ளார்.

ரோஜா படத்துக்காக ஏ ஆர் ரஹ்மான் தேசிய விருது வாங்கிய போது அந்த தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தவர் பாலு மகேந்திராதான் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இறுதிப் பட்டியலில் இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் இடையே போட்டி வந்த போது தான்தான் ஒரு 22 வயது பையனுக்கு அந்த விருது கிடைக்க வேண்டும் என முடிவு செய்து ரஹ்மானுக்கு தேசிய விருது கொடுத்ததாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

vinoth

Recent Posts

உலகமே பேரதிர்ச்சி… பிரசவத்திற்குப் பிறகு திருடப்படும் பெண்களின் அந்த உறுப்பு… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கியமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். குழந்தை பிறக்கும் போது, அதனுடன் சேர்ந்து…

7 minutes ago

“விஜய்யின் ரகசிய லிஸ்ட்… சிக்கிய ஸ்லீப்பர் செல் யார்?… அலறும் மாஜி அமைச்சர்கள்…” தமிழக அரசியலில் அடுத்த ட்விஸ்ட்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது முதல், முந்தைய ஆட்சிக்காலங்களில் முறைகேடுகளில் ஈடுபட்ட திமுக முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்துத்…

9 minutes ago

“உன்னைப்போல் ஆயிரம் பேரை பார்ப்பேன்… 7 மாத கர்ப்பிணி மனைவி சொன்ன ‘அந்த’ வார்த்தை… கணவனின் ஆயுள் தண்டனையைக் குறைத்த நீதிமன்றம்…!”

மத்திய பிரதேசத்தில் 7 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, ஜபல்பூர்…

28 minutes ago

“நீங்க கூட்டிட்டு வந்தா.. நாங்க கோட்டையில சீட் தருவோம்…!” – அதிமுகவை குறிவைத்து விஜய் போட்ட ‘மெகா ஸ்கெட்ச்’.. அலறும் இபிஎஸ்…!

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட உட்கட்சிப் பூசல்களால் அதிமுக பல பிரிவுகளாக உடைந்தது. இறுதியாக எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பை…

34 minutes ago

உஷார் மக்களே!… இலவசம்னு நம்பி ஏமாறாதீங்க… வாட்ஸ்அப்பில் பரவும் ‘ஏர்டெல் க்ரோத்’ மர்மம்… சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை…!

வாட்ஸ்அப்பில் ‘ஏர்டெல் க்ரோத்’ என்ற பெயரில் உலா வரும் லிங்க்குகளை பொதுமக்கள் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என சைபர்…

35 minutes ago

“பொழுதுபோக்குக்காக இதைத்தான் செய்வேன்!”… மேடையிலேயே உண்மையை உடைத்த அதிபர் டிரம்ப்… ஷாக்கிங் பின்னணி…!!

அமெரிக்காவின் இரண்டாம் பெண்மணியான உஷா வான்ஸ் குழந்தைகளுக்காக நடத்தும் 'ஸ்டோரிடைம் வித் தி செகண்ட் லேடி' என்ற சிறார் பாட்காஸ்ட்…

40 minutes ago