பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடரில், லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது ‘பந்து சேதப்படுத்துதல்’ (Ball Tampering) தொடர்பான பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. லாகூர் அணியின் நட்சத்திர வீரர் ஃபகார் ஜமான், பந்தின் தன்மையை மாற்ற முயன்றது கேமராவில் கச்சிதமாகப் சிக்கியது. இந்தச் சம்பவம் மைதானத்தில் இருந்த நடுவர்களால் உடனடியாகக் கவனிக்கப்பட்டு, கிரிக்கெட் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
The moment when ball was allegedly tempered. #LQvsKK #PSL #ShaheenAfridi pic.twitter.com/GlGmeA6f8D
— Saq. (@Comet_2020) March 29, 2026
ஃபகார் ஜமான் பந்தைச் சேதப்படுத்தியதை உறுதி செய்த நடுவர்கள், லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதித்தனர். அதாவது, கராச்சி கிங்ஸ் அணியின் ஸ்கோருடன் கூடுதலாக 5 ரன்கள் சேர்க்கப்பட்டன. நவீன கிரிக்கெட்டில் அதிநவீன கேமராக்கள் இருக்கும் சூழலில், ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் இத்தகைய செயலில் ஈடுபட்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது தீயாய் பரவி வருகிறது.
இந்த விதிமீறல் காரணமாக ஃபகார் ஜமானுக்கு ஆட்ட ஊதியத்தில் இருந்து அபராதம் அல்லது சில போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு இது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. வெற்றியை நோக்கிய முனைப்பில் இருந்த அந்த அணி, இத்தகைய தேவையற்ற சர்ச்சையில் சிக்கியது விளையாட்டுத் தர்மத்திற்கு எதிரானது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
