ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே வரிசையாக தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி கடுமையான ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் ரஜினி சகாப்தம் முடிந்து விட்டது என்றெல்லாம் பேசினார்கள். எனவே ஒரு மெகா ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்று ரஜினி ஆர்வம் காட்டி வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் தான் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினி. ஆனால் ஜெயிலர் படத்திற்கு முன்பாக நெல்சன் இயக்கியிருந்த பீஸ்ட் படம் படுதோல்வியை சந்தித்தது.

எனவே ரஜினியை வைத்து சம்பவம் செய்வாரா? என்ற அச்சம் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் நெல்சன் ரஜினி மீது முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்தார். இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்தது. இந்த படத்தில் ஒவ்வொரு சீனையும் நெல்சன் பட்டை திட்டி இருந்தார். இதன் காரணமாக படம் மெகா பிளாக்பஸ்டர் படமாக வெளியாகி எழுநூறு கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

முதல் பாகம் ஹிட்டானது அடுத்து இரண்டாவது பாகம் உருவாகும் என்று தகவல் வெளியாகியது. ஆனால் அது குறித்து அறிவிப்பு எதுவுமே வெளியாகாமல் இருந்த சூழலில் கடந்த பொங்கலுக்கு வீடியோ உடன் கூடிய அறிவிப்பு வெளியானது. படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தில் சிவராஜ்குமார் நடித்த ரோலுக்கு பதிலாக பாலையா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது புற்றுநோயால் சிகிச்சை பெற்று வரும் சிவராஜ் தற்போது நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார். எனவே அவருக்கு பதிலாக பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
