Actor Ajith Kumar

தயாரிப்பாளர் தில் ராஜூவை அலட்சியப்படுத்திய நடிகர் அஜீத்குமார் – வாய்ப்பை உடனே பயன்படுத்திக் கொண்ட நடிகர் பாலகிருஷ்ணா!

By Elango on மாசி 7, 2026

Spread the love

கடந்த 2024ம் ஆண்டில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் மார்கோ. இந்த படத்தின் இயக்குனர் ஹனீப் அதானி. இது வன்முறை படமாக விமர்சனம் எழுந்தாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் தெலுங்கில் முன்னணி திரைப்பட தயாரிப்பாளராக உள்ள தில்ராஜூ, நடிகர் அஜீத்குமாரை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக மார்கோ பட இயக்குனர் ஹனீப் அதானியை அழைத்து பேசியிருக்கிறார். அவர் சொன்ன கதை மிகவும் பிடித்துப் போக அஜீத்குமார் தரப்பிடம் தில்ராஜூ பேசியிருக்கிறார். ஆனால் அஜீத் தரப்பில் எந்தவிதமான ரியாக்சனும் இல்லை. அதாவது எந்த ஒரு பதிலும் சொல்லாமல் தில்ராஜூவை அலட்சியப்படுத்தியதாக கூறப்படுகிறது.

   

இதையடுத்து ஹனீப் அதானி சொன்ன கதை மிகவும் பிடித்துப் போனதால் அந்த கதையை தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவிடம் கூறியிருக்கிறார். கதை மிகவும் பிடித்துப் போனதால் உடனே ஓகே சொல்லி பாலகிருஷ்ணா கால்ஷீட்டும் தந்து விட்டார். இப்போது அஜீத்குமார் நடிக்க வேண்டிய கேரக்டரில் அந்த படத்தில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கிறார். தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கிறார்.