ஒன்ற வருஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கன்.. ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல.. FATMAN-இன் உண்மை முகத்தை அவிழ்த்த மாஜி போட்டியாளர் பாலாஜி

By admin on ஐப்பசி 11, 2024

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேட்மேன் ரவீந்தரும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். ரவீந்தர் லிப்ரா ப்ரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். பிக் பாஸ்க்கு வெளியே இருந்து போட்டியாளர்களை விமர்சித்த ரவீந்தரை இந்த முறை சீசன் 8 போட்டியாளராக விஜய் டிவி களம் இறக்கியது.

ரூ.16 கோடி மோசடி புகார்: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் கைது | film  producer Ravinder Chandrasekar arrested by police in a cheating case -  hindutamil.in

   

இவர் மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் என்ற படத்தில் பாலாஜியை நடிக்க வைக்க வேண்டும் என முடிவு செய்து அட்வான்ஸ் கொடுத்துள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அந்த படத்தின் அடுத்த கட்ட வேலைகள் நடைபெறாமல் இருந்துள்ளது. சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ரவிந்தர் அந்த கதையை சக போட்டியாளர்களிடம் கூறியுள்ளார். அந்த எபிசோடை பார்த்த பாலாஜி இதுவரைக்கும் நடந்த சம்பவங்கள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

   

பிக்பாஸ் பாலாஜிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே திருமணமாகி விட்டதா? அதிர்ச்சி  புகைப்படங்கள்..! - தமிழ் News - IndiaGlitz.com

 

ரவீந்தர் மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் என்ற பெயரில் என்னை வைத்து படம் எடுப்பதாக சொன்னார். ஒன்றரை வருடங்கள் ஆகியும் அந்த படத்தை எடுக்கவில்லை. அவர் கூறியதை நம்பி நான் எனக்கு வரும் நல்ல படங்களை கைவிட்டு விட்டேன். பலமுறை ரவீந்திரிடம் அது பற்றி பேசியும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. என்னிடம் சொன்ன கதையை அப்படியே பிக் பாஸில் சொல்லிவிட்டார்.

அவர் சொல்லவில்லை என்றால் நான் இதை சொல்லி இருக்க மாட்டேன். சுமார் ஒன்றரை வருடங்கள் ஆன பிறகும் அதனை பற்றி எந்த பதிலும் சொல்லாமல் கேட்கும்போதெல்லாம் எதையாவது சொல்லி சமாளித்து வருகிறார். பிக் பாஸ் அருண் ரவீந்தரை நம்புகிறார். எத்தனை நாட்கள் ஆகியும் எனக்கு எந்த பதிலும் கொடுக்காமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என பாலாஜி அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.