கமலுடன் அந்த படத்தில் நடிக்க மறுத்து ஓடிய இயக்குனர் k. பாலசந்தர்.. உண்மை காரணம் இதுதானா..?

By Nanthini on பங்குனி 24, 2025

Spread the love

இயக்குனர் சரண் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வசூல்ராஜா எம்பிபிஎஸ். கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் கமலுடன் இணைந்து சினேகா, பிரபு, பிரகாஷ்ராஜ் மற்றும் நாகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தத் திரைப்படத்தில் கமலுடன் இணைந்து முதலில் இயக்குனர் கே பாலச்சந்தர் அவர்களை நடிக்க முயற்சி செய்துள்ளனர். அதாவது பாலச்சந்தரை நாகேஷ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முயற்சி செய்த நிலையில் இதனைக் கேட்ட உடனையே பாலச்சந்தர் நிச்சயம் நமக்கு இது செட் ஆகாது என்று தெரிந்து கொண்டு சென்னையில் இருந்து மும்பைக்கு எஸ்கேப் ஆகிவிட்டார்.

வசூல்ராஜாவுக்கு 'நோ' உத்தமவில்லனுக்கு 'ஓகே'… பாலசந்தர் முடிவுக்கு இதான்  காரணமா? - CineReporters

   

அதேசமயம் உத்தமவில்லன் திரைப்படத்தில் அவர் நடிக்க என்ன காரணம் என்றால் அந்த கதாபாத்திரம் தானாம். அதாவது உத்தமவில்லன் திரைப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரம் அன்றாட வாழ்க்கைக்கு மிக நெருக்கமாக இருந்த காரணத்தால் அவர் அப்படத்தில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமலுடன் இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் உத்தம வில்லன் திரைப்படத்தில் இணைந்து நடித்தார். அந்த திரைப்படத்தில் அவர் ஒரு இயக்குனராகவே நடித்திருந்தார். மார்க்கத்தரிசி என்ற கேரக்டரில் அவருடைய நடிப்பு செம்ம மாஸாக இருந்தது.

   

வசூல்ராஜாவுக்கு 'நோ' உத்தமவில்லனுக்கு 'ஓகே'… பாலசந்தர் முடிவுக்கு இதான்  காரணமா? - CineReporters

 

இதுதான் பாலச்சந்தர் நடித்த கடைசி படமாகும். இந்த திரைப்படத்தில் தன்னுடைய குருநாதரை எப்படியாவது நடிக்க வைத்து விட வேண்டும் என்று கமல் ஆசைப்பட்டு உள்ளார். அதுபோலவே அவருடைய ஆசை நிறைவேறி விட்டது. இது ஒரு ஆர்ட் பிலிம் மாதிரி இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் 2004 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் கமல் மற்றும் பிரபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் சக்கை போடு போட்டது குறிப்பிடத்தக்கது.