Categories: சினிமா

“இது ஒரு தாயின் லட்சியம்..” ஏழை பெண்ணின் வாழ்கையில் ஒளியேற்றிய KPY பாலா.. வைரல் வீடியோ..!!

Spread the love

ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் KPY பாலா. இப்போது திரைப்படங்களிலும் பாலா நடித்து வருகிறார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பாலா திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இப்போது பாலா பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார். இந்த நிலையில் தான் வாங்கும் சம்பளத்தை வைத்து ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார். இந்த வயதிலும் பாலா தன்னை சமூக சேவையில் ஈடுபடுத்திக் கொள்வது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மலை கிராம மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல நடிகருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்தது என பாலா செய்த உதவிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாரன்ஸ் மாற்றம் என்னும் சேவையை தொடங்கினார். இந்த சேவையில் KPY பாலா எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்தனர். அவர்கள் மட்டுமில்லாமல் சிறு வயது முதலே லாரன்ஸ் ஆல் வளர்க்கப்பட்டவர்களும் இப்போது மாற்றம் சேவையில் இணைந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாலா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஒரு பெண்மணிக்கு பாலா இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக டிபன் சென்டர் வைத்து கொடுத்துள்ளார். இது ஒரு ஏழைத்தாயின் இலட்சியம். டிபன் சென்டரை ஆரம்பிக்க வேண்டும் என்பது அவரது ஆசை.

இதனால் தான் டிபன் சென்டர் வைத்து கொடுத்ததாக பாலா கேப்ஷனில் பதிவிட்டுள்ளார். முதலில் சர்ப்பிரைஸ் அளிக்கும் விதமாக பாலா அந்த பெண்ணின் கண்களை மூடி அழைத்து வந்து டிபன் சென்டரை காண்பிக்கிறார். அதனை பார்த்ததும் அந்த பெண் சந்தோசத்தில் திகைத்து நிற்கும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. KPY பாலாவின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

admin

Recent Posts

மத்திய கிழக்கு போர் எதிரொலி.. “பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி சாப்பாடுக்கும் தட்டுப்பாடு”… ஸ்தம்பிக்கப் போகும் விவசாயம்… உலக வங்கி நிபுணர் இந்தர்மிட் கில்லின் எச்சரிக்கை…!!!!

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…

9 minutes ago

“பிள்ளையைக் கிள்ளி விட்டு.. தொட்டிலை ஆட்டும் ட்ரம்ப்”…. அமெரிக்காவிற்கு ஈரான் கொடுத்த ‘செங்கடல்’ எச்சரிக்கை… அடுத்த சில நாட்களில் நடக்கப்போவது இதுதான்…!

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…

10 minutes ago

வார்த்தை கூறி 180 சிறுமிகளை சீரழித்த காம கொடூரன்… 350 ஆபாச வீடியோக்கள்… ‘ஸ்னாப்சாட்’ சைக்கோ சிக்கியது எப்படி?… மகாராஷ்டிராவை உலுக்கிய கொடூர சம்பவம்…!!

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…

15 minutes ago

“30,000 கோடி ஆடியோ விவகாரம்”… ஸ்டாலினுக்கு குஷ்பு விடுத்த பகிரங்க சவால்… திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி…!

தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…

22 minutes ago

சீனா கொடுத்த ‘பிக்பாட்’ ட்விஸ்ட்!… ஜி ஜின்பிங் சொன்ன ‘அந்த ஒரு வார்த்தை’… ஈரானுக்கு டிரம்ப் வைத்த செக்… அதிர்ந்து போன உலக நாடுகள்…!!

பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…

27 minutes ago

மூச்சுத் திணறும் உலகப் பொருளாதாரம்… வெறும் 21 மைல் கடற்பரப்பால் அழியப்போகும் வல்லரசு நாடுகளின் கனவு!… இந்தியாவை நிலைகுலையச் செய்யும் அமெரிக்காவின் இந்த ஒரு முடிவு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றத்தால் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கப்பட்டுள்ளது.…

30 minutes ago