நடிகர் லாரன்ஸூடன் இணைந்து சிறுவனின் வாழ்கையில் ஒளியேற்றிய KPY பாலா.. குவியும் பாராட்டுகள்..

By Priya Ram

Published on:

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். காமெடி மட்டும் இல்லாமல் சமூக சேவை செய்வதில் மிகுந்த அக்கறை உடையவர் பாலா. குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது, ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது என தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்.

   

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமயங்களில் மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தார். பாலா உதவி செய்வதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் அவர் செய்யும் அனைத்து நலத்திட்ட உதவியிலும் தனது பங்கு இருக்கும் என ஏற்கனவே கூறியிருந்தார்.

அந்த வகையில் KPY பாலாவும் ராகவா லாரன்ஸ் மாஸ்டரும் இணைந்து கணவரை இழந்து மூன்று பெண் குழந்தைகளுடன் தவிக்கும் ஒரு பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோ வாங்கி கொடுத்தனர். இப்போது பாலா மீண்டும் இணையதளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, மகேஸ்வரன் என்ற சிறுவன் எதிர்பாராதவிதமாக அவனது பார்க்கும் திறனை இழந்து விட்டான்.

அவரது தந்தை ராஜமாணிக்கம் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் சிரமப்படுகிறார். டாக்டர்கள் பணம் கொடுத்தால் அறுவை சிகிச்சை செய்து கண் பார்வையை கொண்டு வருவதாக கூறியுள்ளனர். இதனை அறிந்ததும் நானும் ராகவா லாரன்ஸ் மாஸ்டரும் இணைந்து சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்துள்ளோம் என கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram