விஜய் டிவி தொலைக்காட்சியில் அக்கா தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு தற்பொழுது பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு இருக்கும் சீரியல் தான் மகாநதி. பிரவின் பென்னட் என்பவரால் கடந்த ஆண்டிலிருந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் காவேரி முதலில் நிவீன் என்பவரை காதலித்து வருவார் .அதனை தொடர்ந்து குடும்ப சூழ்நிலை காரணமாக விஜய் என்பவரை தற்காலிகமாக திருமணம் செய்து கொள்வார்.

மேலும் கங்கா என்பவர் குமரனை திருமணம் செய்து கொள்வார் .மேலும் இவர்களுக்கு இடையே சரியான புரிதல் இல்லாமல் இருக்கும்படி சீரியலில் காட்டி இருப்பார்.

குமரன் மற்றும் கங்கா இருவரும் சேர்ந்து திருமணத்திற்கு பின்பு தையல் கடை ஒன்றை ஆரம்பித்து முன்னேறுவதுபோல் கதை இருக்கும் .தற்போது தான் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றனர்.

இந்நிலையில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வந்த திவ்யா கணேஷ் தற்பொழுது டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். தொடர்ந்து என்னால் மகாநதி சீரியலில் நடிக்க முடியாம என்று தெரியவில்லை என்றும் எனவே விலகிக் கொள்ள இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது மகாநதி சீரியளின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
