‘பாக்கியலட்சுமி’ சீரியல் எழிலும், நிலா பாப்பாவும் செய்ற சேட்டை இருக்கே… செம க்யூட்டான வீடியோ உள்ளே…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஓளிபரப்பாகிக் கொண்டுள்ளது. மேலும் சீரியலின் முக்கியமான கதாபாத்திரங்களான, பாக்கியா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சுதீசும் நடித்து வருகின்றனர்.

   

இதில் பாக்கியாவின் மகன்களில் ஒருவரான எழில் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் விஜே விஷால். தற்போது இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளா.ர் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமான இவர் தற்பொழுது சீரியல் நடிகராக பல சீரியல்களில் நடித்து அசத்தி வருகிறார்.

இதை தொடர்ந்து வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்புகளும் இவரை தேடி வந்து கொண்டுள்ளது. அந்த வகையில் இவரின் ஆல்பம் பாடல் ஒன்று சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதோடு மட்டும் இல்லாமல் இவர் தற்பொழுது பிரபல ஹிட்டான ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் குக்காக பங்கேற்று அசத்தி வருகிறார்.

இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் எழில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது குழந்தையாக நிலா பாப்பா என்கிற கதாபாத்திரத்தில் குழந்தை கிரிட்டிஷா நடித்து வருகிறார். தற்பொழுது நடிகர் விஜே விஷால் குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by VJ Vishal (@iamvjvishal)