பாடர் வச்ச சேலைல, போஸ் கொடுத்துள்ள ‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகை ரேஷ்மா…. உருகும் இணையவாசிகள்…

By Archana

Published on:

தற்போது பிரபலமான ஒரு சீரியல் நடிகையாக வளம் வந்துகொண்டிருப்பவர் தான் நடிகை ரேஷ்மா அவர்கள். அந்த வகையில் பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பான “வம்சம்” என்ற சீரியலில்தான் இவர் முதலில் நடித்தார். அதன்பின் தொடர்ந்து சீரியலில் நடிக்க துவங்கினார்.

   

மேலும், இவர் நடித்த புஷ்பா புருஷன் காமெடி ரசிகர்களிடம் பெரிய அளவில் ஹிட்டானது என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் நடிகை ரேஷ்மா அவர்கள். ஆனால், ரசிகர்களிடம் எடுபடவில்லை.

தற்போது தொடர்ந்து சீரியல்களில் நடிக்க துவங்கிவிட்டார். குறிப்பாக “பாக்கியலட்சுமி” சீரியல் இவரை மக்களிடத்தில் மற்றும் சீரியல் ரசிகர்களிடத்தில் நெருக்கமாக்கியுள்ளது. இந்நிலையில், தற்போது பட்டு போல பாட்டர் வச்ச புடவையில் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

author avatar
Archana