‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபியா இது?… தாடி, மீசை எல்லாம் வச்சு சும்மா ஜம்முனு இருக்காரே…

By Begam on பங்குனி 20, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர்ஹிட் சீரியலில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலுக்கு தற்பொழுது எக்கச்சக்க ரசிகர்கள் உருவாகி வருகின்றனர். தற்போது இந்த சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தையும் பிடித்துள்ளது. இந்த தொடரில் பாக்யா கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ராவும், கோபி கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும் தங்களது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

   

தற்பொழுது இந்த தொடரில் பாக்யாவிற்கும் ராதிகா விற்கும் இடையில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் கோபியின் பாடு தான் திண்டாட்டம். தனது கணவனால் கைவிடப்பட்ட பாக்கியா, தற்பொழுது தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளார்.

   

 

சாதனை பெண்மணியாக கலக்கி வருகிறார். பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்து வருகிறார். தற்பொழுது இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சதீஷின் பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் சதீஷ் பாக்கியலட்சுமி சீரியல்களில் நடிப்பதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்துள்ளார்.. ஆனால் அவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் கிடைத்தது போன்ற பிரபலம் வேறு எந்த சீரியலிலும் கிடைக்கவில்லை என்றே கூறலாம். இந்நிலையில் இவர் தாடி, மீசை எல்லாம் வைத்து ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் புகைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.