பிரபல நடிகரான சூரி விடுதலை, கருடன் ஆகிய படங்கள் மூலம் ஹீரோவாக வெற்றி பெற்றார். இந்த நிலையில் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவான கொட்டுக்காளி படத்தில் சூரி நடித்துள்ளார். வருகிற 23-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் கொட்டுக்காளி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கொட்டுகாளி படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, படம் 23-ஆம் தேதி தான் ரிலீஸ் ஆக உள்ளது.

ஆனால் படம் மீது உள்ள நம்பிக்கையால் பத்திரிக்கையாளர்களுக்கு 18-ஆம் தேதியே படத்தை போட்டு காட்டியுள்ளனர். சூரி வெளிநாட்டில் வேலை செய்து தனது மாமன் மகளை படிக்க வைக்கிறார். அந்த பெண் வேறு ஒருவனை காதலிப்பதாகவும், அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என சொந்த ஊருக்கு வரும் சூரியிடம் கூறுகிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சூரி பக்கத்து கிராமத்தில் ஒரு சாமியார் இருக்கிறார். அவர் பெண்ணின் மனதை மாற்றி விடுவார் என உறவினர்கள் கூறியுள்ளனர்.

இதனால் சாமியை பார்க்க செல்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தில் கதை ஒன்றுமே இல்லை. வினோத் ராஜிக்கு ஒன்றுமே தெரியவில்லை. வினோத் ராஜ் இயக்கிய கூழாங்கல் படம் நல்லா இருந்துச்சு. ஆனால் சூரி இந்த படத்தை ஒப்புக்கொண்டு எப்படி நடித்தார் என்பதும் தெரியவில்லை. சிவகார்த்திகேயன் வினோத் ராஜ் பெரிய இயக்குனராக வருவார் என கூறினார். நீங்கள் கமர்சியல் படங்களில் நடித்து இப்போது 70 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.

நீங்கள் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்வது தப்பில்லை. ஆனால் நல்ல கதையை வைத்திருக்கும் இயக்குனர்களை நம்பி முதலீடு செய்து படம் எடுங்க. வினோத் ராஜ் உங்கிட்ட இந்த படத்தின் கதையை சொல்லித்தான் ஓகே வாங்கினாரா என்று சந்தேகமா இருக்கு. படம் மொக்கையாக இருக்கிறது. வெளிநாடுகளுக்கு சென்று விருது வாங்கினால் மட்டும் போதுமா? ரசிகர்களின் இதயத்தில் படம் இடம் பிடிக்க வேண்டாமா? கண்டிப்பா இந்த படம் ஓடவே ஓடாது. முதல் காட்சியை பார்க்க சூரியை நம்பி ரசிகர்கள் வருவார்கள். அதுக்கப்புறம் யாருமே போக மாட்டாங்க. இதுதான் நடக்கும் என ஓப்பனாக பேசியுள்ளார்.

