Categories: HISTORY

முகலாய சாம்ராஜ்யத்தின் முற்றுப்புள்ளியாக வாழ்ந்த கடைசி அரசர், ஆனால் அந்த விஷயத்தில் இவர்தான் முதல் முகலாய மன்னர்! இதுல இப்படி ஒரு சுவாரஸ்யம் இருக்கா?

இந்திய வரலாற்றில் முகலாயர்களை தவிர்த்துவிட்டு நாம் நமது வரலாற்றை எழுதிவிடமுடியாது. பாபரால் தோற்றுவிக்கப்பட்ட முகலாய சாம்ராஜ்யம் ஔரங்கசீப் காலகட்டத்தில் ஆஃப்கன் முதல் தென் இந்தியா வரை அதன் நிழல் நீண்டிருந்தது. ஆனால் ஔரங்கசீப்பிற்கு பிறகு வந்த மன்னர்கள் முகலாய சாம்ராஜ்ய வரலாற்றில் தனித்துவம் பெறவில்லை.

ஔரங்கசீப்பை தொடர்ந்து அடுத்தடுத்து 15 மன்னர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் முகலாய சாம்ராஜ்யத்தின் சரிவு ஔரங்கசீப்பிற்கு அடுத்து ஆட்சிக்கு வந்த ஆசம் ஷாவில் இருந்து தொடங்கியது. பாபரால் 1526 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட முகலாய சாம்ராஜ்யம் 1857 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

அந்த சமயத்தில் முகலாய மன்னராக இருந்தவர் இரண்டாம் பகதூர் ஷா. இவர்தான் முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னர். இவர் முகலாய மன்னராக பதவியில் இருந்தபோது டெல்லியும் அதனை சுற்றியுள்ள சில பகுதிகள் மட்டுமே இவரது கைவசத்தில் இருந்தன. அந்த சமயத்தில் கிழக்கிந்திய கம்பெனி தனது ஆளுகையை நிலைநாட்டியிருந்தது.

அந்த கம்பெனி ஆட்சிக்கு எதிராக தோன்றிய சிப்பாய் புரட்சியில் முகலாய மன்னரான இரண்டாம் பகதூர் ஷாவின் பங்கும் அதிகளவில் இருந்தது. ஆதலால் ராஜ துரோக குற்றத்திற்காக பிரிட்டிஷார் இவரை பர்மாவில் உள்ள ரங்கூனுக்கு நாடு கடத்தினார்கள். 300 ஆண்டுகளுக்கும் மேல் ஆஃப்கன், பாகிஸ்தான் உட்பட்ட இந்தியாவின் அகண்ட நிலபரப்பை ஆண்ட முகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி வாரிசு ரங்கூனில் ஒரு பழைய பாழடைந்த மர வீட்டில் 1862 ஆம் ஆண்டு அஸ்தமனம் ஆனது.

எனினும் கடைசி முகலாய மன்னரான  இரண்டாம் பகதூர் ஷாவை பற்றிய ஒரு குறிப்பிடத்தக்க செய்தி வரலாற்றில் பதிவாகியுள்ளது. அதாவது இவர் கடைசி முகலாய மன்னராக இருந்தாலும், புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல் முகலாய மன்னர் இவர்தான். அவருக்கு முன்பிருந்த மன்னர்களுக்கு காலம் அந்த வாய்ப்பை அளிக்கவில்லை. மற்ற முகலாய மன்னர்களின் ஓவியங்கள் மட்டுமே நமக்கு கிடைக்க இரண்டாம் பகதூர் ஷாவின் புகைப்படம் நமக்கு கிடைக்கிறது. இவ்வாறு புகைப்படம் எடுத்துக்கொண்ட முதல் முகலாய மன்னராக திகழ்ந்துள்ளார் இரண்டாம் பகதூர் ஷா.

Arun

Recent Posts

‘பொற்காலம்’ விமர்சனத்தில் நான் சொன்ன அந்த ஒரு வார்த்தை… சேரன் ஆஃபிஸுக்கு வந்து பொங்கிட்டாரு- ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்த தகவல்!

சிலரை அறிமுகப்படுத்தும் போது அவரை என்ன சொல்லி அறிமுகப்படுத்துவது என்ற குழப்பம் வரும். அந்த அளவுக்கு பல துறைகளில் தங்கள்…

39 mins ago

“வத்திக்குச்சி பத்திக்காதுடா” வாலி எழுதிய வரிகள்… ஷாக் ஆன ஏஆர் முருகதாஸ்… இதுதான் காரணமா…?

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான…

1 hour ago

‘வின்னர் கைப்புள்ள கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விவேக்கா?…  ஏன் நடக்காம போச்சுனா? ‘- பல வருஷ சீக்ரெட்டை போட்டுடைத்த சுந்தர் சி!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

1 hour ago

அடேங்கப்பா..! இது மாஸ்டர் பிளானால்ல இருக்கு.. கல்லா கட்ட கரெக்டான நேரத்தில் இந்தியன் தாத்தாவை களம் இறக்கும் லைகா..!

தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் தயாரிப்பில் உருவான…

13 hours ago

சிம்புவைக் கண்டு தெரிச்சி ஓடிய 2 டாப் ஹீரோஸ்.. தக் லைஃப் படத்தில் STR நடிக்க இவ்வளவு பெரிய பிளாஷ் பேக்கா..?

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். மணிரத்தினம் திரைப்படத்தில் நடித்து விட்டாலே அவர் மிகப்பெரிய பிரபலம்…

14 hours ago

ஆள் அடையாளமே தெரியாம மாறிய 90’ஸ் பிரபல நடிகை அஞ்சு.. இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் பேபி அஞ்சு. அதனை தொடர்ந்து கோகிலா, கேளடி…

14 hours ago