#image_title
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், வின்னர், கிரி, கலகலப்பு என ஏராளமான படங்கள் கமர்ஷியலாக பெருவெற்றி பெற்றுள்ளன. முறைமாமன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுந்தர் சி காமெடி, கிளாமர், ஆக்ஷன் என கலந்து கட்டி மசாலா படமாக எடுத்து முன்னணி இயக்குனர் ஆனார்.
சுந்தர் சி படத்துக்கு சென்றால் வாய்விட்டு சிரித்து ரசித்துவிட்டு வரலாம் என்பதே தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். அதற்கேற்றார் போல சுந்தர் சி படங்கள் சுமாராக் இருந்தாலும் காமெடி கட்டாயம் ஹிட்டாகிவிடும். அவர் இயக்கத்தில் கவுண்டமணி, விவேக், வடிவேலு, சந்தான, சூரி மற்றும் யோகி பாபு என அனைத்து முன்னணி நகைச்சுவை நடிகர்களும் நடித்துள்ளனர்.
அப்படி அவர் படங்களில் நகைச்சுவையில் உச்சம் தொட்டது வின்னர் கைப்புள்ள காமெடி. அதுதான் வடிவேலுவும் சுந்தர் சியும் இணைந்து பணியாற்றிய முதல் படம். அந்த படத்தில் வடிவேலு கைப்புள்ளையாக அடித்த அலப்பறைக்கு வாய்விட்டு சிரிக்காத தமிழ் ரசிகர்களே இருக்க முடியாது. அதன் பின்னர் வடிவேலுவோடு இணைந்து பல படங்களில் பணியாற்றினார் சுந்தர் சி.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் வின்னர் படம் பற்றி பேசும்போது பலரும் அறியாத ஒரு ஆச்சர்யத் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “நான் இப்போது ஒரு தகவல் சொன்னா பலருக்கும் ஆச்சர்யமா இருக்கும். வின்னர் படத்தை எடுக்க நான் நினைத்த போது அந்த கைப்புள்ள பாத்திரத்தில் விவேக் சாரைதான் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்தேன்.
ஆனால் அப்போது எனக்கும் அவருக்கும் இடையில் ஒரு கருத்து வேறுபாடு இருந்தது. அதுவுமில்லாமல் ஏற்கனவே நான் விவேக்கோடு சில படங்களில் பணியாற்றியிருந்தேன். அதனால் புதுக் கூட்டணியாக இருக்கட்டுமே என வடிவேலு சாரிடம் சென்றேன். “ எனக் கூறியுள்ளார். இதே போல வடிவேலு நடிக்க இருந்த படிக்காதவன் படத்தில் விவேக் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசாம் மாநிலத்தில் குழந்தைத் திருமண முறையை முற்றிலும் ஒழிப்பதற்காக அம்மாநில அரசு மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையில் இதுவரை 537…
பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…
சாலையோரத்தில் கை கால்கள் முடங்கி நடக்க இயலாதவர் போல நடித்துப் பிச்சை எடுத்து வந்த நபர் ஒருவரிடம், "சிகிச்சை அளிக்க…
சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…