Categories: சினிமா

சிம்புவைக் கண்டு தெரிச்சி ஓடிய 2 டாப் ஹீரோஸ்.. தக் லைஃப் படத்தில் STR நடிக்க இவ்வளவு பெரிய பிளாஷ் பேக்கா..?

Spread the love

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம். மணிரத்தினம் திரைப்படத்தில் நடித்து விட்டாலே அவர் மிகப்பெரிய பிரபலம் தான் என்று கூறும் அளவிற்கு தனக்கென ஒரு தனி புகழைப் பெற்று வைத்திருக்கின்றார் மணிரத்தினம். தற்போது இவர் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கமலஹாசன் உடன் இணையும் திரைப்படம் தக் லைஃப். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.

அதில் கமலஹாசன் உடன் இணைந்து ஜெயம் ரவி, துர்கா சல்மான் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கப் போகிறார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் ஜெயம் ரவியும், துல்கர் சல்மானும் கால்சீட் பிரச்சினை காரணமாக இந்த படத்தில் இருந்து விலகி விட்டார்கள். துல்கர் சல்மான் உண்மையாகவே கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகினார். ஆனால் ஜெயம் ரவி இந்த திரைப்படத்தின் சிம்பு என்ட்ரி கொடுக்கிறார் என்று கேள்விப்பட்டவுடன் இந்த படத்தில் இருந்து விலகிவிட்டார் என்று தமிழ் சினிமாவில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயன்ட் மற்றும் ராஜ்கமல் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் தான் தக் லைஃப். இந்த திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது சிம்புவுக்கு ஜோடியாக தான் திரிஷா நடிக்க இருக்கிறாராம். அது மட்டும் இல்லாமல் கமலஹாசனுக்கு ஜோடியாக விருமாண்டி படத்தில் நடித்திருந்த அபிராமி நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.

இன்று நடிகர் சிம்பு இந்த திரைப்படத்தில் இருப்பதற்கான என்ட்ரி டீசர் வெளியானது. சிம்பு போலீஸ் அதிகாரியாக இந்த திரைப்படத்தில் நடிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே நடிகர் சிம்பு ராஜ்கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருந்த சிம்பு 48 படத்தின் சூட்டிங் இன்னும் தொடங்காமலையே இருந்து வருகின்றது.

அந்த திரைப்படம் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதா? அல்லது நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இருப்பினும் சிம்புவுக்கு ராஜ்கமல் நிறுவனத்திடம் இருந்து ஒரு தொகை வழங்கப்பட்டிருக்கின்றது. அதனை சரி கட்டுவதற்காக தான் மணிரத்தினம் இயக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் சிம்புவுக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்து மேனேஜ் செய்திருப்பதாக தகவல் கிசுகிசுக்கப்படுகின்றது. இதற்கிடையில் தற்போது நடிகர் சிம்பு தக் லைஃப் திரைப்படத்தில் இணைந்து இருக்கின்றார்.

இவர் ஜெயம் ரவி படத்திலிருந்து வெளியேறிய காரணத்தினால் அவர் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்று பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் நடிகர் அசோக் செல்வன் இப்படத்தில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகின்றது. விரைவில் அவரின் என்ட்ரியும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாஸ் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். அது மட்டும் இல்லாமல் இன்று வெளியான டீசரில் ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் பெயர் இடம் பெறாத காரணத்தினால் அவர்கள் இப்படத்திலிருந்து வெளியாகி இருப்பது உறுதியாக இருக்கின்றது.

Mahalakshmi

Recent Posts

உலகிற்கு வந்த சோதனை… கச்சா எண்ணெய் முதல் மீன் வரை.. சீனா விரிக்கும் “மிதக்கும் வலை”… அதிர்ச்சியில் இந்தியா…!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி ஏற்கனவே முடங்கியுள்ள நிலையில், தற்போது ஆசியாவின் மற்றொரு முக்கியப் பகுதியான…

44 seconds ago

தித் திக் நிமிடங்கள்!…விளக்கேற்றிய பெண்… கண்ணிமைக்கும் நேரத்தில் பரவிய தீ… அலறிய பெண்… அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி… தூத்துக்குடியில் பெரும் சோக சம்பவம்..!!

தூத்துக்குடி மட்டக்கடை கோவில் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மனைவி பிரேமா (58), தனது வீட்டில் வழக்கம்போல் குத்துவிளக்கு ஏற்றி வைத்து…

1 minute ago

“யாரு லாலிபாப் பேபி?”… விஜயை வம்புக்கு இழுத்த பிரேமலதாவிற்கு ப்ளூ சட்டை மாறன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் போர்க்களமாக மாறியுள்ளது. குறிப்பாக,…

9 minutes ago

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்… விஜய் கட்சியில் இருந்து விலகும் செங்கோட்டையன்… பகீர் கிளப்பும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்….!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்துள்ள மூத்த அரசியல்வாதி கே.ஏ.…

14 minutes ago

“கல்லறை மேலே தான் மாநகராட்சி அலுவலகம்… அட்டகாசம் செய்யும் பேய்கள்”… அமைச்சர் சஞ்சய் சிர்சாத் கிளப்பிய புது குண்டு.. அலறும் ஊழியர்கள்..!!!

மகாராஷ்டிர மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத், சத்ரபதி சம்பாஜிநகர் மாநகராட்சி அலுவலகம் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துக்கள் மாநில அரசியலில் பெரும்…

15 minutes ago

“3000 கோடிக்கு சரக்கு.. படிக்கல, குடிக்கிறாங்க”… ஜி.கே.மணி யாருக்கு வலது கரம்?… மேடையிலேயே கல்லைத் தூக்கிக் காட்டி ஸ்டாலினை அதிரவைத்த அன்புமணி…!

தர்மபுரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.…

17 minutes ago