Categories: CINEMA

15 வயதில் ஹீரோயின்.. அந்த நடிகரின் மகனுடன் காதல்.. 22 வயதில் உயிரை மாய்த்துக்கொண்ட நடிகை படாபட் ஜெயலட்சுமியின் வாழ்க்கை பயணம்..

நடிகை படாபட் ஜெயலட்சுமி என்பவர் 1958ல் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொத்தம் 66 படங்களில் நடித்த அவர் 22 வயதில் அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை.

என்றாலும் அப்போது அவரது வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான விஷயங்களே இதற்கு காரணம் என்பது பின்னர் தெரிய வந்தது. ரஜினிகாந்த் ஒருமுறை உங்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகை யார் என்று கேட்ட போது, உடனே படாபட் ஜெயலட்சுமி எனக் குறிப்பிட்டார். அவருடன் முல்லும் மலரும், 6 லிருந்து 60 வயது வரை ஆகிய 2 படங்களில் நடித்திருந்தார். 1972ல், தனது 15வது வயதில், இட்டாரு அம்மாயிலு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.

படாபட் ஜெயலட்சுமி, 66 படங்களில் நடித்த நிலையில் தமிழில், ரஜினி கமல் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நிறைய சொத்துகளை அப்போதே சம்பாதித்தார். எம்ஜிஆரின் அண்ணன் எம்ஜி சக்ரபாணி மகன் சுகுமாரன் சில படங்களில் அப்போது நடித்தார். அந்த வகையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. எம்ஜிஆர் அண்ணன் மகன் சுகுமாரன் ஏறக்குறைய எம்ஜிஆரை போலவே மிக அழகிய தோற்றத்தில் அவர் இருந்துள்ளார். அவர் மீது அதிக காதல் வயப்பட்ட படாபட் ஜெயலட்சுமி அவரை திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்பட்டு இருக்கிறார். ஆனால் சுகுமாரன் ஏற்கனவே திருமணமானவர்.

அதுமட்டுமின்றி அவர் எம்ஜிஆரின் அண்ணன் மகன். 1980களில் எம்ஜிஆர் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக தமிழகத்தில் இருந்தார். அவரது அண்ணன் மகனை திருமணம் செய்து கொள்வது என்பது, அதுவும் 22 வயதான படாபட் ஜெயலட்சுமிக்கு மிகப்பெரிய அச்சத்தையே தந்தது. ஆனால் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாக அப்போது பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் அதன் உண்மை தன்மை சரியாக தெரியவில்லை. அதே வேளையில் படாபட் ஜெயலட்சுமியின் பல சொத்துகளை, சுகுமாரன் அபகரித்துக் கொண்டதாகவும் பரபரப்பான தகவல் பரவியது.

இப்படி காதல் தோல்வி தந்த ஏமாற்றம், சம்பாதித்த சொத்துகளை இழந்த வேதனை காரணமாக, படாபட் ஜெயலட்சுமி, அதிகளவில் தூக்க மாத்திரைகளை உட்கொணடு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிய வந்துள்ளது. 15 வயதில் கதாநாயகியாக சினிமாவுக்குள் வந்த படாபட் ஜெயலட்சுமி, தனது 22 வயதில் உயிரை மாய்த்துக்கொண்டார். இது அப்போதைய காலகட்டத்தில், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக இருந்தது.

Sumathi
Sumathi

Recent Posts

சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷும், சிம்புவும் அதை செய்றாங்க… இதெல்லாம் ரொம்ப அநியாயம்… சினிமா பிரபலம் புலம்பல்!

சிவகார்த்திகேயனின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் அபரிமிதமானது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்ற சில சூப்பர் ஸ்டார்களே பெற்றது…

5 mins ago

கையில் கட்டுடன் கேன்ஸ் பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய்.. வியந்துபோன வெளிநாட்டினர்.. புகைப்படங்கள் வைரல்..

நடிகை ஐஸ்வர்யா ராய் மே 14ஆம் தேதி துவங்கப்பட்ட கேன்சர் திரைப்பட விழாவிற்கு கையில் பெரிய கட்டோடு கலந்து கொண்ட…

25 mins ago

உலகின் தலைசிறந்த சொல் செயல்.. இந்தியாவுக்காக ஆட முடியாமல் தவித்த மாணவி.. லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

சினிமாவில் பல பிரபலங்கள் கோடி கோடியாய் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால் அவர்களில் பலருக்கு பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பது…

2 hours ago

சிவாஜி கணேசன் பிறந்த அன்று கைதான அவரின் தந்தை… ஏழு வருஷம் சிறை தண்டனை!… பலரும் அறியாத சிவாஜியின் குழந்தைப் பருவ சோகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை இன்று வரை தக்கவைத்துள்ளவர் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி…

4 hours ago

தளபதி 69 படத்தின் கதை இதுதானா..! ஐயோ இது ஏற்கனவே நடிச்ச கதையாச்சே.. என்ன பண்ணி வைக்கப் போறாரோ நம்ம வினோத்து..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

14 hours ago

தக் லைஃப் படத்தில் சிம்பு நடிப்பாரா, நடிக்க மாட்டாரா..?  விளக்கம் கொடுத்த வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கணேஷ்..!

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என்று கோரி தயாரிப்பாளர் சங்கத்தில் வேல்ஸ் நிறுவன தலைவர் ஐசரி கணேஷ்…

15 hours ago