15 வயதில் ஹீரோயின்.. அந்த நடிகரின் மகனுடன் காதல்.. 22 வயதில் உயிரை மாய்த்துக்கொண்ட நடிகை படாபட் ஜெயலட்சுமியின் வாழ்க்கை பயணம்..

By Sumathi

Updated on:

நடிகை படாபட் ஜெயலட்சுமி என்பவர் 1958ல் பிறந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொத்தம் 66 படங்களில் நடித்த அவர் 22 வயதில் அதிக தூக்க மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை.

என்றாலும் அப்போது அவரது வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான விஷயங்களே இதற்கு காரணம் என்பது பின்னர் தெரிய வந்தது. ரஜினிகாந்த் ஒருமுறை உங்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகை யார் என்று கேட்ட போது, உடனே படாபட் ஜெயலட்சுமி எனக் குறிப்பிட்டார். அவருடன் முல்லும் மலரும், 6 லிருந்து 60 வயது வரை ஆகிய 2 படங்களில் நடித்திருந்தார். 1972ல், தனது 15வது வயதில், இட்டாரு அம்மாயிலு என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.

   

படாபட் ஜெயலட்சுமி, 66 படங்களில் நடித்த நிலையில் தமிழில், ரஜினி கமல் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நிறைய சொத்துகளை அப்போதே சம்பாதித்தார். எம்ஜிஆரின் அண்ணன் எம்ஜி சக்ரபாணி மகன் சுகுமாரன் சில படங்களில் அப்போது நடித்தார். அந்த வகையில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. எம்ஜிஆர் அண்ணன் மகன் சுகுமாரன் ஏறக்குறைய எம்ஜிஆரை போலவே மிக அழகிய தோற்றத்தில் அவர் இருந்துள்ளார். அவர் மீது அதிக காதல் வயப்பட்ட படாபட் ஜெயலட்சுமி அவரை திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்பட்டு இருக்கிறார். ஆனால் சுகுமாரன் ஏற்கனவே திருமணமானவர்.

அதுமட்டுமின்றி அவர் எம்ஜிஆரின் அண்ணன் மகன். 1980களில் எம்ஜிஆர் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக தமிழகத்தில் இருந்தார். அவரது அண்ணன் மகனை திருமணம் செய்து கொள்வது என்பது, அதுவும் 22 வயதான படாபட் ஜெயலட்சுமிக்கு மிகப்பெரிய அச்சத்தையே தந்தது. ஆனால் இருவருக்கும் திருமணம் நடந்துவிட்டதாக அப்போது பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. ஆனால் அதன் உண்மை தன்மை சரியாக தெரியவில்லை. அதே வேளையில் படாபட் ஜெயலட்சுமியின் பல சொத்துகளை, சுகுமாரன் அபகரித்துக் கொண்டதாகவும் பரபரப்பான தகவல் பரவியது.

இப்படி காதல் தோல்வி தந்த ஏமாற்றம், சம்பாதித்த சொத்துகளை இழந்த வேதனை காரணமாக, படாபட் ஜெயலட்சுமி, அதிகளவில் தூக்க மாத்திரைகளை உட்கொணடு தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிய வந்துள்ளது. 15 வயதில் கதாநாயகியாக சினிமாவுக்குள் வந்த படாபட் ஜெயலட்சுமி, தனது 22 வயதில் உயிரை மாய்த்துக்கொண்டார். இது அப்போதைய காலகட்டத்தில், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய சம்பவமாக இருந்தது.

author avatar
Sumathi