3 zodiac signs

இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப உஷாரா இருக்கணும்… 2026ல் கொடிய விஷபோதக யோகத்தால் ரொம்ப மோசமான சோதனை காலம் வரப் போகுது!

By Elango on தை 4, 2026

Spread the love

வருகிற பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் பகவான் ராகுவுடன் இணைந்து விஷ போதக யோகத்தை உருவாக்குகிறார். இதனால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க உள்ளனர் நவகிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை வீரம் ஆற்றல் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார்.

வரும் பிப்ரவரி மாதம் 23ம் தேதி காலை 11:57 மணிக்கு கும்ப ராசியில் நுழையும் செவ்வாய் பகவான், ஏப்ரல் 2ம் தேதி வரை அந்த ராசியிலேயே பயணிப்பார். ஏற்கனவே கும்ப ராசியில் பாவ கிரகமான ராகு பகவான் வசிக்கிறார். செவ்வாய் ராகு இணைவதால் விஷ போதக யோகம் உருவாகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டத்தை அளிக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த ராசிகள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

   

மேஷம்
மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு விஷ போதக யோகம் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை உருவாக்கக்கூடும். 11ம் வீடான லாப ஸ்தானத்தில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை நிலை இருக்கிறது. இதனால் ஆசைகள் நிறைவேறாமல் போகலாம். சிறிய வேலைகளுக்கு கூட அதிக முயற்சி தேவைப்படும். பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இதனால் மன வருத்தம் உருவாகும். மேஷ ராசிக்கு ஏழரை சனியும் நடப்பதால் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் தந்தை உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

   

தனுசு
தனுசு ராசிக்கு 3ம் வீட்டில் செவ்வாய் மற்றும் ராகுவின் சேர்க்கை நடைபெற உள்ளது. தனுசு ராசிக்கு அர்த்தம சனி நடந்து வருகிறது. இதனால் தனுசு ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படலாம். பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் வரை ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் மனதில் மந்த நிலை தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம். தொழிலில் நஷ்டம், முதலீடுகளில் நிதி இழப்புகள் போன்றவற்றை சந்திக்கலாம். குடும்ப விஷயங்களை பொறுமையாக கையாள்வது முக்கியம். பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும்.

 

மகரம்
மகர ராசியில் 2ம் வீட்டில் விஷ போதக யோகம் உருவாகிறது. இது தன ஸ்தானம் என்பதால் நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். முதலீடுகளை செய்வதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும். உடல்நலம் குறித்த கவலைகள் ஏற்படலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். உடன் பிறந்தவர்கள் உடல் நிலையில் பின்னடைவுகள் ஏற்படலாம். பணவிரயம் குடும்பத்தில் வாக்குவாதம் கண் தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். ஆன்லைன் பண வர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வாகனங்களை இயக்கும்போது நிதானமாக இருக்க வேண்டும்.