ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை என்பதை அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முக்கியப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்துவிட்டதாகவும், இந்த பிடிவாதமான முடிவு அமெரிக்காவை விட ஈரானுக்கே பெரும் பின்னடைவையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஈரானின் இந்தத் தீர்மானத்தால் பிராந்தியத்தில் நிலவி வந்த போர்நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளதோடு, மத்திய கிழக்குப்பகுதியில் மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
