இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் பேட் கேர்ள். இந்தத் திரைப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் அவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். அதில், சீமான் நடித்திருந்த அவளோட ராவுகள் செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை என இந்த இரண்டு திரைப்படங்களும் கொஞ்சம் விவகாரமான திரைப்படங்கள் தான்.

இந்தத் திரைப்படங்களை மீறுவதற்கு ஒரு திரைப்படம் வரப்போகிறது என்றால் அதுதான் இந்த பேட் கேர்ள். இந்த படம் குறித்து நாம் எவ்வளவுதான் விமர்சனம் செய்தாலும் வசூலில் மாபெரும் சாதனை படைக்க போகிறது என்பதை மறந்து விடாதீர்கள். படத்திற்கு ஏராளமான பிரமோஷன் நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் டிரைலரிலேயே படத்தின் கதையையும் இயக்குனர் முழுவதுமாக சொல்லிவிட்டார். அந்தப் படத்தின் நாயகி ஒரு பிராமண பெண்ணாக இருக்கின்றார். அவருக்கு விருப்பம் போல வாழ வேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால் பிராமண பெற்றோர்களும் அவளின் உறவினர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ஆனால் பிராமண பெண் தன் இஷ்டத்திற்கு வாழ வேண்டும், தன் விருப்பப்படி வாழ வேண்டும், ஆண் நண்பர் வைத்துக் கொள்வதை ஒரு கௌரவமாக கருதுகின்றாள். அதுமட்டுமல்லாமல் அந்த ஆண் நண்பருடன் உடலுறவு வைத்துக் கொள்வது மற்றும் டேட்டிங் செல்வது என அனைத்தும் நடக்கின்றது. இதைத் தவறு என்று அந்த பெண்ணின் தோழிகள் கண்டித்தும் அதை அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்றது போல நடந்து கொள்கிறார். இப்படி ஒரு மோசமான இந்த திரைப்படத்தில் அந்த பெண் ஒரு பிராமண பெண்ணாக ஏன் காட்டி இருக்கின்றார்.

பட்டியலின மக்களை மட்டும் சினிமாவில் தவறாக சித்தரிக்கிறார்கள் என்று கூச்சலிடும் பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் தங்களுடைய படத்தில் ஒரு பிராமண பெண்ணை இப்படி ஒரு மோசமான கதாபாத்திரத்தில் காட்டி இருப்பது தவறு இல்லையா. உங்களுக்கு ஒரு நியாயம் பிராமண பெண்ணுக்கு ஒரு நியாயமா. சினிமாவில் இப்படி ஒரு கதை எல்லாம் தேவையா? தேவை இல்லாமல் ஒரு பிராமண பெண்ணை விமர்சித்தது ஏன். உண்மையில் பிராமணர்கள் பாவம்தான். இதை எதிர்த்து யாரும் போராட்டம் செய்ய மாட்டார்கள்.

இந்த ஒரு படம் வெளியில் வந்தால் பிராமணர்களின் மரியாதை கெட்டுவிடும் போல இருக்கிறது. ஆனால் போகோ சட்டத்தின் கீழ் பள்ளி சீறார்களை தவறாக சித்தரிக்கும் திரைப்படத்தை போக்சோ படத்தை கண்டிக்கும் உரிமை உண்டு. நிச்சயமாக பேட் கேர்ள் படத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் இந்த படத்திற்கு நிச்சயம் சிக்கல் வரும். ஆனால் இவ்வளவு ஆபாசம் இருக்கும் போது சென்சார் போர்டு அனுமதித்தது என்று தெரியவில்லை. ஒருவேளை சென்சார் போர்டும் இந்த ஆபாசத்தை தான் விரும்புகின்றதா என தெரியவில்லை என்று பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
