“பள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸ்… 2 மணி நேரப் போராட்டம்…” வயிற்றில் இருந்த குழந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்… பெரும் சோகம்…!!

By Devi Ramu on புரட்டாதி 7, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தின் பாஹ் துணைப்பிரிவுக்கு உட்பட்ட கத்பர் கிராமத்தில், நிதி (25) என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்குச் செப்டம்பர் 3-ஆம் தேதி அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. குடும்பத்தினர் உடனடியாக அவசர ஆம்புலன்ஸ் சேவைக்குத் தகவல் தெரிவித்து, ஆம்புலன்ஸில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கிராம இணைப்புச் சாலையில் சென்றபோது, மழையால் சேதமடைந்திருந்த சாலையில் இருந்த பெரிய பள்ளத்தில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டது. வாகனத்தைச் சேற்றில் இருந்து வெளியே எடுக்க முடியாததால், அப்பகுதி மக்கள் டிராக்டர் கொண்டு வந்து நீண்ட நேரம் போராடி ஆம்புலன்ஸை மீட்டனர். இதனால் மருத்துவமனைக்குச் சென்று சேர 2 மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமானது.

   

அதிகாலை 3.30 மணியளவில் சமூக சுகாதார மையத்தை அடைந்தபோது, பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கல் மற்றும் நீண்ட தாமதம் காரணமாகக் குழந்தை வயிற்றிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட சாலை மழையால் சேதமடைந்தும் அதை அதிகாரிகள் சீரமைக்காததே இந்த இழப்புக்குக் காரணம் என கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் துணை கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.