நடிகர் பப்லு பிரித்திவிராஜ் கடந்த 1990 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சந்தன காற்று, சிகரம், நான் பேச நினைப்பதெல்லாம், செல்ல கண்ணு உள்ளிட்ட திரைப்படங்களில் பப்லு நடித்துள்ளார். 57 வயதான பப்லு தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு இளம் நடிகரைப் போலவே உள்ளார். அவரும் 21 வயது மலேசியா பெண் ஷீத்தல் என்பவர் மேல் காதல் வயப்பட்டு ஒன்றாக வாழ்ந்தனர்.
இந்த செய்தி அனைவரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வயதில் கல்யாணம் தேவையா என பலரும் பப்லுவை விமர்சித்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அந்த பிரச்சனையால் திடீரென ஷீத்தல் பப்லுவை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதுவரை பப்லு தான் கலந்து கொண்ட பேட்டிகளில் சில பிரச்சனைகளை பற்றி கூறினார். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இருவருக்கும் செட் ஆகவில்லை என்று மட்டும் தான் பப்லு கூறி வந்தார். ஷீத்தல் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அவர் கூறும் போது, எங்களுக்குள் என்ன வேண்டும் என்றாலும் நடந்திருக்கலாம். அது ஒரு மேட்டர் இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் நாங்கள் பிரிய வேண்டும் என நினைத்து இருவருமே பிரிந்து விட்டோம்.
அது மட்டும் இல்லாமல் அவர் எனக்கு அன்பளிப்பாக கொடுத்த அத்தனை பொருட்களையும் திரும்ப கொடுத்து விட்டேன். முதல் முதலில் ப்ரபோஸ் செய்யும் போது கொடுத்த மோதிரத்தையும் அவரிடம் நான் கொடுத்து விட்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஷீத்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவர் தனது திருமண போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். சுமேஷ் சோமசேகரன் என்பவர் உடன் தான் இவருடைய திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…
ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டம் பாப்பூர் பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறி ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஆற்றிற்குத்…
வந்தே பாரத் ரயிலின் கழிவறையில் பாம்பு இருப்பதாகப் பயணி ஒருவர் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படத்தைக்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தனது மகளின் பிறந்தநாளைக் கொண்டாட வந்த மருமகனுக்கு, மாமனாரே விஷம் வைத்துக் கொலை செய்துள்ள…