தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் நடிகர் மட்டுமல்ல .ஒரு இசையமைப்பாளரும் கூட. அது மட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசியலிலும் களமிறங்கி கலக்கியவர். சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் ‘லொடுக்கு பாண்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பின்னர் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார்.
இதைத் தொடர்ந்து வில்லன், புதிய கீதை ,திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்த மாமா போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இப்போது அவரின் வாரிசான கென் கருணாஸும் நடிகராக தமிழ் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தின் மூலம் கென் நடிகராக அறிமுகமானார்.
அந்த படத்தில் அவர் ஏற்று நடித்த சிதம்பரம் கதாபாத்திரத்தை வெகு சிறப்பாக நடித்தார் என்று பாராட்டுகளைப் பெற்றார். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவான விடுதலை 2 வில் நடித்துள்ளார். இந்த படத்தில் சூப்பராக நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய இவர், என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக விடுதலை 2 படம் மாறுனதுக்கு நான் வெற்றிமாறன் சாருக்கு, இந்த மேடையில் நான் பெரிய நன்றியை சொல்லிக்கிறேன். எனக்கு நிறையபேர் அழைத்து வாழ்த்து சொன்னாங்க. உதவி இயக்குநராக சுத்திட்டு இருந்தேன். வெற்றி சார் ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, ஒன்னே ஒன்னுதான் சொன்னார். கோவணம் கட்டணும்ன்னு சொன்னார். சரி சார்னு சொன்னேன்.
இளம்பெண்ணிற்கு பெற்றோர் பார்த்து கிராமத்திலேயே முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் அந்தப் பெண்ணின் கவனம் தன்…
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகையை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்…
ஹைதராபாத் பாலநகர் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஷாபூரிலிருந்து அமீர்பேட்டையிலுள்ள தனது…
கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…