விஜய் டிவியில் மிகவும் பிரபலமான செயல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. குடும்ப தலைவியின் கதையை மையமாகக் கொண்ட இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணி இடத்தில் இருந்து வருகின்றது. அதேசமயம் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சினையை வைத்து ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியல் குறித்த எதிர்பார்ப்பை இயக்குனர் ஏற்படுத்தி வருகின்றார்.

இவ்வளவு பிரச்சனைகளுக்கும் குடும்பப் பெண்ணாக இருந்து பாக்கியா எப்படி தைரியமாக எதிர்கொள்கிறார் மற்றும் குடும்பத்திற்காக என்னென்ன விஷயங்களை தியாகம் செய்கிறார் என்பதை கருப்பொருளாக வைத்து கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. தற்போது ராமமூர்த்தி இறந்த கதைக்களம் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்ததாக வரப்போகிறது. அதை நினைத்து ரசிகர்கள் அனைவரும் சோகம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் ராமமூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரோசரி தனது கதாபாத்திர முடிவுக்கு வருவது குறித்து ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், ஆரம்பத்தில் எனக்கு ஏன் இந்த திடீர் முடிவு என தோன்றியது. சீரியலில் நல்ல பாசிட்டிவ் கதாபாத்திரம், முடிந்தது வருத்தமாக தான் உள்ளது. தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக சொன்னார்கள், கதைப்படி ராமமூர்த்தி கதாபாத்திரம் முடிவடைய உள்ளதாக கூறினார்கள், அதனால் வேறு வழி இல்லை.

இதை ஏன் நேரில் வந்து கூறுகிறீர்கள் என்று கேட்டதற்கு, இறுதி சடங்கு எல்லாம் ரியலா பண்ணனும் என்று சொன்னாங்க, சரி ஓகே பண்ணிக்கோங்க என்று சொல்லிவிட்டேன். ராமமூர்த்திக்கு தான் அவங்க இறுதி சடங்கு பண்றாங்கன்னு எடுத்துக்கிட்டேன். நான் கதையை மதிப்பவன், அது நடிப்பு அவ்வளவுதான், ரோசரி நல்லா தான் இருக்கேன் என்று கூறியுள்ளார். இதனால் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
