ஐயோ பாவம்… அப்பா, அம்மா என்னை மன்னிச்சிடுங்க… கடிதம் எழுதி வைத்துவிட்டு… பி.டெக் மாணவன் தற்கொலை… லக்னோவில் அதிர்ச்சி சம்பவம்…!

By Swetha on ஆவணி 28, 2026

Spread the love

லக்னோவில் வசிக்கும் 18 வயது பி.டெக் மாணவர் ஒருவர் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவரின் அறையில் பெற்றோருக்கு எழுதப்பட்ட உருக்கமான குறிப்பு ஒன்றை காவல்துறை கைப்பற்றியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரம்ப கட்ட விசாரணையின்படி, குடும்பத்தினரிடையே ஏற்பட்ட தகராறு மற்றும் கருத்து வேறுபாடுகளே மாணவரின் இந்த முடிவுக்குக் முக்கியக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து உறுதிப்படுத்த மாணவரின் தொலைபேசி அழைப்புப் பதிவுகள் மற்றும் பிற மின்னணுச் சான்றுகளைக் காவல்துறை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

   

இளம் வயதிலேயே மாணவர்கள் இது போன்ற கடினமான முடிவுகளைத் தவிர்ப்பதற்குப் பெற்றோரும், குடும்பத்தினரும் மனநல ரீதியான ஆதரவை வழங்குவது அவசியமாகும். இக்கட்டான சூழ்நிலைகளில் முறையான மனநல ஆலோசகர்களின் உதவியை நாடுவது இதுபோன்ற சோகமான நிகழ்வுகளைத் தடுக்க உதவும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.