B.Ed சேரும் மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி இப்படியும் கல்லூரியை தேர்வு செய்யலாம்…!

By Srimathi on ஆவணி 5, 2025

Spread the love

பி.எட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முதல் முறையாக இந்த ஆண்டு 2025-26, இணையத்தில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு பி.எட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேரடியாக நடத்தப்பட்டது. இதனால் வெளியூர் மாணவர்கள் சென்னைக்கு வந்து செல்லும் நிலையில் இருந்தது. இந்நிலையில் வெளியூர் மாணவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் இந்த ஆண்டு பி.எட் சேர்க்கை  கலந்தாய்வு இணைய வழியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விருப்பக் கல்லூரிகளை  www.lwiase.ac.in  என்ற இணையதளம் மூலம் தேர்ந்தெடுக்கலாம். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரி(பி .எட்)  மாணவர் சேர்க்கை, விருப்ப பாடங்களை  இணைய வழியில் மாணவர்கள் தேர்வு செய்யலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.