காலையில் படப்பிடிப்பிலும் மாலையில மருத்துவமனையிலும் இருப்பார்.. ‘அயோத்தி’ பட இயக்குனர் குறித்து வெளியான ஷாக்கிங் தகவல்..

By Ranjith Kumar

Published on:

2023 ஆம் ஆண்டு புது இயக்குனரான “மந்திரமூர்த்தி” இயக்கத்தில் சசிகுமார், யாஷ்பால் ஷர்மா, ப்ரீத்தி அஸ்ராணி, புகழ் இவர்களின் நடிப்பில் வெளியாகி தமிழ் திரை உலகையே கண்கலங்க வைத்த படம் தான் “அயோத்தி”. இப்படம் யாரும் எதிர்பார்க்காமல் திரைக்கு வந்து ரசிகர் மத்தியில் மாபெரும் உணர்ச்சியை தூண்டும் அளவிற்கு படத்தை சிறப்பித்து காண்பித்திருக்கிறார் இயக்குனர்.

இப்படத்தில் இசையமைப்பாளர் என்.ஆர் ரகுநாதன் அவர்கள் படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் இசை மலையை தூவி ஒவ்வொரு விஷயத்தையும் இசை மூலம் மிகச் சிறப்பாக தூக்கி காட்டியிருப்பார். இவர் இசையும் இப்படத்தின் வெற்றிக்கு ஒரு மாபெரும் படிக்கலாக அமைந்தது. படத்தின் இயக்கமும் இசையும் சேர்ந்து மக்கள் மனதை பிழிந்து எடுத்தது என்றே கூறலாம். இயக்குனர் மந்திரமூர்த்தி அவர்களுக்கு அயோத்தி படம் முதல் படம் என்பதால், படத்திற்கு முன்பாக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று சாய் வித் சித்ரா நேர்காணலில் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் வெளிப்படுத்தியுள்ளார் ;

   

அயோத்தி படத்தை எடுப்பதற்காக மதுரைக்கு போயிட்டு எல்லாம் செட் பண்ணி வச்சாச்சு, எனக்கு அப்பதான் தெரிய வந்துச்சு மூர்த்திக்கு அப்பன்டிக்ஸ் இருக்குதுன்னு, அதனால அவரு வயிறு வலியில் ரொம்ப கஷ்டப்பட்டு வந்தார், அப்போ அவுங்க குடும்பத்துல இருக்குறவங்க, அவருக்கு ஆபரேஷன் பண்ணான்னு மருத்துவமனையில அனுமதிச்சிருக்காங்க. ஆனா அவரு எனக்கு கால் பண்ணி நான் இதை ஆபரேஷன் பண்ண மாட்டேன், அப்படின்னு சொன்னாரு, நான் சொன்னேன் ஆப்ரேஷன் பண்ணிக்கல செத்துருவடான்னு சொன்னேன், அதுக்கு மந்திரமூர்த்தி நான் படம் பண்ணி செத்தா கூட பரவால்ல, ஆப்ரேஷன்ல சாகக்கூடாதுன்னு சொன்னாரு.

அப்புறம் வற்புறுத்தி ஆப்பரேஷன் பண்ண வச்சுக்கிட்டோம், படப்பிடிப்பில் டெய்லியும் வந்து வைத்த புடிச்சிட்டு கஷ்டப்பட்டுட்டு தான் படத்தை டைரக்ட் பண்ணுவாரு, அப்படியே படம் முடிஞ்ச உடனே ஈவினிங் மருத்துவமனைக்கு போய் அட்மிட் ஆயிருவாரு, காலையில படப்பிடிப்பு தளத்துல இருப்பாரு, இரவு முழுசா மருத்துவமனைக்கு போயிடுவாரு, இப்படியே கஷ்டப்பட்டு தான் படத்தை எடுத்து இவ்ளோ தூரம் கொண்டு வந்து விட்டிருக்காரு.

என்று இயக்குனர் மந்திர மூர்த்தி அவர்கள் முதல் படமான அயோத்தி படத்தில் தன் உடல் நிலையை சரியில்லாமல் இருந்தும் எவ்வளவு கஷ்டப்பட்டு படத்தை இயக்கினார் என்று சாய் சித்ரா நேர்காணலில் அவர் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் வெளிப்படுத்தி உள்ளார்.

author avatar
Ranjith Kumar