தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனருடன் கைகோர்க்கும் சூர்யா.. என்னப்பா இவருக்கு இவ்வளவு Demand ஆ.?

By Ranjith Kumar

Published on:

சூர்யாவின்   மிரட்டலான நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகி வருகிறது.  யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்த படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க 3D தொழிற்நுட்பத்தில் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நடிகர் சூர்யா 10-க்கும் மேற்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் மற்றும் பாபி தியோல், திஷா பதானி, நடராஜன், சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜி.மாரிமுத்து, தீபா வெங்கட், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், பி.எஸ். அவினாஷ், விதார்த், பாபி சிம்ஹா போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.

   

தற்போதைய படத்தை முடித்துவிட்டு சூர்யா கை வசமாக வைத்திருக்கும் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாக இருக்கும் புறநானூறு படத்தில் நடிக்க இருந்தார் சூர்யா, தற்போது படம் டிராப் அவுட் ஆகியுள்ளது என்று தகவல் கசிந்துள்ளது. வணங்கான் வாடிவாசல் படத்தை தொடர்ந்து தற்போது புறநானூறு படமும் சூர்யா கைவிட்டுப் போக அடுத்த படம் யார் என்ற கேள்வி பல எழுப்பப்பட்டது? தற்போது கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை கொடுத்த அயலான் பட இயக்குனர் ஆர் ரவிக்குமார் சூர்யாவின் 43வது படத்தை இயக்க உள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

இப்படம் 24 படம் போல முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த படமாக எடுக்க உள்ளார்களாம். NGK படத்தை தயாரித்து வெளியிட்ட ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சூர்யாவின் 43 வது படத்தை தயாரித்து வெளியிட உள்ளார்களாம். இப்படத்திற்கான அப்டேட்டை இந்த மாதம் கடைசிக்குள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Ranjith Kumar