நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை பறிபோகும்…. SIR குறித்து TVK தலைவர் விஜய் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ..!!

By Soundarya on கார்த்திகை 15, 2025

Spread the love

SIR பணிகள் குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் உள்ள யாருக்கும் ஓட்டுப்போடும் உரிமை இழக்கும் நிலை வந்தாலும் வரலாம். இந்திய அரசியல் சாசனம் நமக்கு கொடுத்துள்ள உரிமைகளில் முக்கியமானது வாக்குரிமை. SIR மூலம் லட்சக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படலாம். கொஞ்சம் ஏமாந்தா நம்ம எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் போகும்.

வாக்கு செலுத்துவது என்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது வாழ்க்கை. GEN Z உள்ளிட்ட புதிய வாக்காளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். SIR பணிகள் முடிந்து புதிய வாக்காளர் பட்டியல் வரும்வரை நாம் வாக்காளர்களா? இல்லையா  என்பது யாருக்கும் தெரியாது. ஒரே மாதத்தில் அனைவருக்கும் எப்படி SIR படிவம் சென்று சேரும்? FORM கொடுக்கப்போகிறார்கள் என்பதற்காக வேலையை கெடுத்து வீட்டில் இருக்க வேண்டுமா? என கூறியுள்ளார்.