“கிரேனில் தொங்கிய 4 பேர்…” பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்… இணையத்தை அதிர வைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 24, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் கோடிகுப்பல் பகுதியில் நடைபெற்ற தசராவின் போது, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுத்துப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பாலியல் வன்முறையை நிறுத்துங்கள், பெண்களுக்கு மதிப்பளியுங்கள் என்ற வாசகங்களுடன் வெளியான விழிப்புணர்வுச் செய்தி சமூக வலைதளங்களில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் கிரேன் மூலம் 4 பேர் தொங்கி கொண்டிருந்தனர். தவறு செய்பவர்களுக்கு வழங்கும் தண்டனையை பிரதிபலிக்கும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது.

தசராவின் போது பொதுமக்களிடையே பெண்களின் பாதுகாப்பு குறித்தும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து இந்தச் செய்தி முன்னெடுக்கப்பட்டது. எனினும், சமூக வலைதளங்களில் இது குறித்துப் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை விவாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.