தமிழக அரசு சார்பில் சமீபத்தில் 2016ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் கடந்த 2020ம் ஆண்டில் வெளியான சண்டக்காரி என்ற படத்துக்கு சிறந்த திரைப்படம், சிறந்த பாடகர் சிறந்த கலை இயக்குனர் ஆகிய பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் விமல் ஸ்ரேயா நடித்துள்ள இந்த படம் இன்னும் தியேட்டரிலோ ஓடிடி தளத்திலோ வெளியாகவில்லை. சண்டைக்காரி படம் மலையாளத்தில் உருவான மை பாஸ் என்ற படத்தின் ரீமேக் படமாகும்.
பொதுவாக ரீமேக் படங்களுக்கு தமிழக அரசு விருது அறிவிப்பது இல்லை. இப்படி திரைக்கும் ஓடிடிக்கும் வராத ரசிகர்ககள் பார்க்காத ஒரு ரீமேக் படத்துக்கு தமிழக அரசு 3 விருதுகளைஅறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியிலும் திரை துறையினர் மத்தியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சண்டைக்காரி படத்தின் இயக்குனர் மதன் திரைப்பட விருது தேர்வுக்குழுவில் ஒரு உறுப்பினர் என்பதால் இது அவரது படம் என்பதால் இப்படி 3 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
