தமிழ் சினிமாவில் மிகவும் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏவிஎம் நிறுவனம் சார்பாக கடந்த 1966 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அன்பே வா. எம்ஜிஆர், சரோஜாதேவி, நாகேஷ் மற்றும் மனோரமா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தை ஏசி திரிலோக சந்தர் இயக்கியிருந்தார். எம் எஸ் விஸ்வநாதன் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் எம்ஜிஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்று அறிவிப்பு வெளியான உடனே இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

அது மட்டுமல்லாமல் எம்ஜிஆர் முழுக்க முழுக்க ஒரு காதல் படத்தில் நடித்தது இதுதான் முதல் முறை. அதனால் இப்படத்தில் அனைத்து பாடல்களும் வெற்றி பெற வேண்டும் என்று ஏவிஎம் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டது. இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வட இந்தியாவின் சிம்லாவில் தான் படம் எடுக்கப்பட்டது. அங்கு குளிர் அதிகமாக இருந்ததால் படத்தின் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த அவர் தனது காரை விட்டு இறங்காமல் காரின் கதவுகள் மற்றும் கண்ணாடிகளை சாத்திக் கொண்டு அதிலேயே ஓய்வு எடுத்தார். படப்பிடிப்பு சமயத்தில் இடைவேளை நேரத்தில் அனைவரும் டீ குடிக்க சென்றுள்ளனர்.

அப்போது ஏவிஎம் சரவணனுக்கு உடல்நிலை சரியில்லாததை அறிந்த எம்ஜிஆர் ஒரு ஃப்ளாஷ் கீழ் பால் வாங்கிக் கொண்டு கம்பளியில் வைத்துக்கொண்டு ஏவிஎம் சரவணன் இருந்த காரின் கதவை தட்டி உள்ளார். சத்தம் கேட்டு இருந்த சரவணன், சார் இதையெல்லாம் நீங்க ஏன் செய்ய வேண்டும், வேலையாட்கள் யார்கிட்டயாவது கொடுத்துவிட்டு இருக்கலாம் என்று கேட்க, அவங்க கிட்ட கொடுத்து விட்டா நீங்க குடிக்க மாட்டீங்க அதனால தான் நானே கொண்டு வந்தேன் நீங்க இத குடிக்கணும் என்று கூறி எம்ஜிஆர் கொடுத்துள்ளார். இவ்வாறு அன்பே வா படபிடிப்பில் நடந்த சுவாரசியத்தை பிரபல இயக்குனர் எஸ் பி முத்துராமன் ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.
