“பாதர் எங்கள விட்ருங்க”… பள்ளியிலேயே கதறிய சிறுமிகள்… தேவாலய பாதிரியார் செய்த அசிங்கம்… தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…!

Spread the love

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள குன்னத்தூர் பகுதியில், பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த பள்ளித் தாளாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குன்னத்தூர் அருகே தேவாலய வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில், அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்தத் தேவாலயத்தின் பாதிரியாராகவும், பள்ளியின் தாளாளராகவும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 57 வயதுடைய ராபர்ட் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் அவ்வப்போது பள்ளி வகுப்பறைகளைக் கண்காணிப்பதாகக் கூறி, அங்கு பயிலும் சிறுமிகளிடம் அநாகரீகமாகப் பேசுவதும், பாலியல் ரீதியான சீண்டல்களில் ஈடுபடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் பயத்தின் காரணமாக யாரிடமும் சொல்லாத சிறுமிகள், ஒருகட்டத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள், அவசர போலீஸ் எண் 100-க்கு அழைத்துத் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில், குன்னத்தூர் காவல் ஆய்வாளர் சுசீலா மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் பள்ளிக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பாதிரியார் ராபர்ட் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட ராபர்ட் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைச் சிறையில் அடைத்தார். புனிதமான தேவாலயம் மற்றும் கல்வி கற்கும் பள்ளியின் தாளாளராக இருந்தவரே பிஞ்சுச் சிறுமிகளிடம் அத்துமீறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

1 மணத்தியாலம் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

2 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

2 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

3 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago