“பாடகியின் திறமையை அறிந்து உதவிய ஏவி மெய்யப்ப செட்டியார்”…. இளையராஜாவிடம் கிடைத்த மிகப்பெரிய மரியாதை…!!!

By Mahalakshmi

Published on:

பொதுவாக இன்றைய சினிமாவில் நடைபெறும் அனைத்து விஷயங்களையும் நாம் உடனுக்குடன் தெரிந்து கொள்கிறோம். அதற்கு காரணம் சமூக வலைதள பக்கங்கள். சினிமா படங்கள் டாப் நடிகர் படங்களின் அப்டேட், பாடல்கள், ட்ரெய்லர் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நம்மால் எளிய முறையில் தெரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால் இவை அனைத்தும் வெளியானவுடன் சமூக வலைதள பக்கங்களில் வெளிவந்து விடுகின்றது.

   

ஆனால் 70 மற்றும் 80ஸ் காலகட்டத்தில் இருந்தால் நடிகர், நடிகைகளை பற்றி அவ்வளவாக நமக்கு தெரியாது. அவர்களுடன் பணியாற்றிய ஒரு சில நபர்கள் அவர்களைப் பற்றி பேட்டியில் தெரிவிக்கும் போது தான் இப்படி எல்லாம் நடந்துள்ளதா? என்பதே நமக்கு அறிய வருகின்றது. அப்படி தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் காலத்தில் நடந்த ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார் நடிகர் சித்ரா லக்ஷ்மணன்.

இவர் பிரபல பாடகி எம் எஸ் ராஜேஸ்வரி பற்றி பல தகவல்களை கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் பலர் முன்னேறுவதற்கு ஏணியாக இருந்தவர் ஏவி மெய்யப்பட்டியார். அப்படி புகழ் ஏணியில் ஏற்றிவிட்ட ஒரு முன்னணி பாடகி எம் எஸ் ராஜேஸ்வரி. இவர் பாடுவதற்கு எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும் அதை அனைத்தையும் முறியடித்து தனக்கு ஒரு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தவர் ஏவி மெய்யப்ப செட்டியார் என்று பலமுறை அவர் தெரிவித்திருக்கின்றார்.

என்னுடைய குரல் மீது அவருக்கு அந்த அளவு நம்பிக்கை இருந்தது. அதனால் தன்னை பலதரப்பட்ட பாடல்களை பாட வைத்து அழகு பார்த்தார் என பெருமிதத்துடன் எம் எஸ் ராஜேஸ்வரி பல பேட்டிகளில் தெரிவித்திருந்ததாக கூறியிருந்தார் சித்ரா லக்ஷ்மணன். இவரின் பாடல்கள் இன்றைய ரசிகர்களுக்கு பெரிய அளவில் தெரிந்திருப்பதற்கு வாய்ப்பு கிடையாது. இவர் நாயகன் திரைப்படத்தில் ஜமுனா ராணியுடன் இணைந்து ‘நீ சிரித்தால் தீபாவளி’ என்ற பாடலை பாடியிருப்பார்.

அந்த பாடலின் கம்போசிங் போது நடந்த ஒரு சில விஷயங்களையும் பகிர்ந்து இருந்தார் சித்ரா லக்ஷ்மணன். இளையராஜாவின் இசையில் இவர் பாடிய முதல் பாடல் இதுதான். இந்த பாடல் கம்போஸ் செய்வதற்கு முன்பு பலரும் இவரிடம் கூறியது ‘நீ பழைய பாடகி என்பதற்காக உனக்கு முன்னுரிமை கொடுப்பார்’ என்று எதிர்பார்க்காதே என பயமுறுத்தி அனுப்பினார்களாம். ஆனால் அங்கு நடந்தது வேறு அதாவது அவரை இளையராஜா மதிப்பும் மரியாதையுடன் நடத்தி அந்த பாடலை பாட வைத்தார் என்று பழைய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்திருந்ததாக சித்ரா லட்சுமணன் பகிர்ந்திருக்கிறார்.

author avatar
Mahalakshmi