என்னடா இது..? உள்ளாடை விற்கும் தானியங்கி இயந்திரமா..? டெல்லி மெட்ரோவின் வினோத கண்டுபிடிப்பால் அதிர்ச்சியடைந்த இணையவாசிகள்…

By Soundarya on மாசி 5, 2026

Spread the love
டெல்லி ரோகிணி கிழக்கு மெட்ரோ நிலையத்தில், சிப்ஸ் மற்றும் குளிர்பானங்களுக்குப் பதிலாக உள்ளாடைகளை விற்பனை செய்யும் தானியங்கி இயந்திரம் (Vending Machine) வைக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் வீடியோவில், பெண் பயணி ஒருவர் இந்த இயந்திரத்தைக் கண்டு வியந்து சிரித்தபடி தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். “பயணத்தின் நடுவில் யாருக்கு திடீரென்று உள்ளாடைகள் தேவைப்படும்?” என்று அவர் நகைச்சுவையாகக் கேள்வி எழுப்பியது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

View this post on Instagram

 

   

A post shared by Billu Baddie (@baddie.billu)

சுமார் 8 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோ, இணையவாசிகளிடையே கலவையான கருத்துகளைப் பெற்று வருகிறது. சிலர் இது போன்ற இயந்திரங்களின் அவசியத்தைக் கேள்வி எழுப்பினாலும், மற்றவர்கள் அவசரத் தேவைகளுக்காகவும் பயணிகளின் வசதிக்காகவும் இது போன்ற நவீன முயற்சிகள் வரவேற்கத்தக்கவை என்று கருத்து தெரிவித்துள்ளனர். பாரம்பரியமாக தின்பண்டங்கள் மட்டுமே கிடைக்கும் இடங்களில் இத்தகைய மாற்றங்கள் பயணிகளை ஆச்சரியத்திலும் ஆர்வத்திலும் ஆழ்த்தியுள்ளன.