“ஐயோ அண்ணா என்னை விட்டுருங்க”… 11 வயது சிறுமியை அழைத்துச் சென்று ஆட்டோ டிரைவர் செய்த கொடூரம்… பட்டப் பகலில் நடந்த பயங்கரம்…!

By Nanthini on மார்கழி 30, 2025

Spread the love

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுனரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளையான்குடியை அடுத்துள்ள கொம்படி மதுரை கிராமம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 11 வயதான ஆறாம் வகுப்பு சிறுமி ஒருவரை தின்பண்டங்கள் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி கார்த்திக் தனது ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.

அதன் பிறகு அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி தன் தாயிடம் இது பற்றி கூறிய நிலையில் சிறுமியின் தாயார் சிவகங்கையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 11 வயது சிறுமியை ஆட்டோ டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.