உச்சகட்ட கொடூரம்… காதலியை மலை உச்சியில் உறைய வைத்து கொலை செய்த காதலன்?… நம்பிச்சென்ற பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த சோகம்…!

Spread the love

மலையேறும் பழக்கம் கொண்ட காதலனால் திட்டமிட்டு கிராஸ்க்லாக்னர் மலையில் கைவிடப்பட்டு பணியில் உறைந்து ஆஸ்திரேலிய பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலனால் ஏமாற்றப்பட்டு மோசமான முறையில் உயிரிழந்த பெண்ணின் மறைவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பலரும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். சால்ஸ்பர்க்கை சேர்ந்த 33 வயதான கெர்ஸ்டின் கர்ட்னர் என்ற அந்தப் பெண் சமூக ஊடகங்களில் தன்னை குளிர்கால குழந்தை என்றும் மலையேறும் நபர் என்றும் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அவர் ஆஸ்திரேலியாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றான கிராஸ்க்லாக்னரில் அனுபவம் வாய்ந்த வழிகாட்டியான 39 வயதான தன்னுடைய காதலர் தாமஸ் உடன் ஏறியது அவரின் கடைசி பயணமாக மாறி உள்ளது. திட்டமிட்டதை விட இரண்டு மணி நேரம் தாமதமாக இந்த ஜோடி மலையேற்றத்தை தொடங்கியது. மேலும் -20°C வரை குறைந்த வெப்பநிலை மற்றும் சூறாவளி காற்று உள்ளிட்ட தீவிர நிலைமைகளை எதிர்கொண்டுள்ளது. அந்தப் பெண் சோர்வடைந்து உச்சியை அடைய 150 அடி மட்டுமே இருந்த சூழலில் தன்னிலையே இழந்துள்ளார்.

இது குறித்த வழக்கு விசாரணையின் போது, அதிகாலை இரண்டு மணியளவில் உதவிக்காக செல்ல பிளாம்பெர்கர் என்ற அவருடைய காதலர் அந்த பெண்ணை பாதுகாப்பற்ற முறையில் விட்டு சென்றதாகவும் ஆனால் குளிரிலிருந்து பாதுகாக்க அவசரப் போர்வைகள் அல்லது சாக்கை பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. மீட்பு பணிக்கான உதவிகளை தொடர்பு கொள்ள அந்தப் பெண்மணி கணக்கில் காத்திருந்துள்ளார். முதல் அழைப்பிற்கு பிறகு தன்னுடைய தொலைபேசியை சைலண்டில் வைத்திருந்ததாகவும் அவரை தொடர்பு கொள்வதற்கான கூடுதல் முயற்சிகளை தவறவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சில மணி நேரங்களுக்கு பிறகு ஒரு ஹெட் டார்ச் மட்டுமே மழையின் உச்சியில் நகர்ந்ததை வெட்கெம் படங்கள் படப்பிடித்தன என்று போலீசார் கூறுகின்றனர். மறுநாள் காலை வரை பலத்த காற்று காரணமாக மீட்பு குழுவினரால் அந்த பெண்ணை அடைய முடியாத சூழலில் அவருடைய இருப்பிடத்தை அடைந்தபோது அந்தப் பெண் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனைத் தொடர்ந்து காதலர் மீது அலட்சியத்தால் ஏற்பட்ட மனித கொலைக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் குற்றம் நிரூபிக்கப்படாமல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிகிறது. உள்நோக்கத்துடன் தன்னுடைய காதலியை மலை உச்சியில் தனியாக தவிக்க விட்டாரா அல்லது உண்மையிலேயே கடும் பனி காரணமாக வழி தவறி பிரிந்து விட்டார்களா என்று தெரியாமல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

Nanthini

Recent Posts

புதுச்சேரிக்கு தமிழக தவெக தொண்டர்கள் வரக்கூடாது… காவல்துறை எச்சரிக்கை…!!

முன்னதாக புதுச்சேரியில் TVK  சார்பில் கோரப்பட்ட பேரணிக்கு (roadshow) அனுமதி மறுக்கப்பட்டு, திறந்தவெளி பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.…

25 minutes ago

விஜய் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்…! இரவோடு இரவாக கழட்டப்பட்ட ஜனநாயகன் பேனர்… மொத்த பணமும் வேஸ்ட்…!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய்  நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜனநாயகன். இந்த படம் வரும் பொங்கலுக்கு…

49 minutes ago

திமுக ஆட்சியில் ரூ.1,020,00,00,000 ஊழல்…. கே.என்.நேரு அடித்த கொள்ளை.. புட்டு புட்டு வைத்த எடப்பாடி..!!

அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.1,020…

58 minutes ago

திடீர் திருப்பம்… விஜயின் தந்தையை ரகசியமாக சந்தித்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகி… கூட்டணிக்கு அச்சாரமா?… பரபரப்பில் தமிழக அரசியல் களம்…!

விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் திடீரென சந்திப்பு நடத்தியது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம்…

1 மணி நேரம் ago

விமானத்திற்குள் திடீரென நுழைந்து ஆட்டம் காட்டிய புறா… அலறிய பயணிகள்… வைரலாகும் வீடியோ…!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெரிதும்…

1 மணி நேரம் ago

2026 தேர்தல்… மாம்பழம் சின்னத்தில்தான் போட்டி… சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு…

2 மணி நேரங்கள் ago