“வாழ்க்கை பணத்திற்காக அல்ல”… ஆஸ்திரேலியா பயணியை வியக்க வைத்த ஆட்டோ ஓட்டுனரின் ஆங்கில பேச்சு… இணையத்தை கலக்கும் வீடியோ…!

By Nanthini on கார்த்திகை 15, 2025

Spread the love

இந்திய தெருக்களில் பலருடைய இதயத்தையும் கவனத்தையும் கவரும் மக்கள் தினம்தோறும் இருக்கின்றனர். இதில் வாழ்க்கை ஞானம் மற்றும் ஆங்கிலத்தின் முக்கியத்துவம் கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு ஆட்டோ ஓட்டுனரின் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய பயணி ஒருவர் அவர் பயணித்த ஆட்டோவில் இருந்த வயதான ஓட்டுணரின் ஆங்கில புலமை மற்றும் நெகிழ்வான உரையாடலால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். அவர் உரையாடிய காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதை கண்டு அந்தப் பயணி வியப்பில் ஆழ்ந்துள்ளார். மேலும் அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் என்பதை சரியாக யூகித்ததும் அந்த ஆஸ்திரேலிய பயணிக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் அந்த ஓட்டுனர் முன்னாள் மெல்போர்ணியில் சமையல்காரர் ஆக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அந்தப் பையன் நீங்கள் இப்போது இந்தியாவில் வணிகம் ஏதாவது செய்கிறீர்களா என்று கேட்டதற்கு ஓட்டுனர் கூறிய பதில் அனைவருடைய மனதையும் கவர்ந்தது.

   

அதாவது நான் ஒரு தொழிலதிபர் அல்ல, நான் மகிழ்ச்சியாக வாழும் மனிதர், நான் பணக்காரர் இல்லை, பணம் வாழ்க்கைக்கு தேவையானது தான் ஆனால் வாழ்க்கை பணத்திற்காக அல்ல என்று கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஓட்டுனர் அந்த பயணியை ஒரு சிறிய தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று அங்கு ஆங்கிலத்தில் உரையாடியது இந்திய தெருக்களில் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வந்துள்ளது. தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

   

 

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

India Flipside பதிவைப் பகிர்ந்துள்ளார் (@india_flipside)