ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளன் மேக்ஸ்வெல் என்பது அனைவரும் அறிந்ததே. ஐபிஎல் தொடரில் இவர் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனிலும் அவரை 11 கோடிக்கு ஏலம் எடுத்து பெங்களூர் அணி தக்க வைத்துக் கொண்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ் பெண்ணான வினிராமன் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் மேக்ஸ்வெல்.

மணமகள் வினி ராமன் ஆஸ்திரேலியாவில் பார்மசி படித்தவர் என்பதும் சென்னை மேற்கு மாம்பத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய முறைப்படி இவர்களுடைய திருமணம் கடந்த வருடம் மார்ச் 20ஆம் தேதி நடைபெற்றது.

தனது திருமண பத்திரிக்கை தமிழில் அச்சடிக்க வேண்டும் என வினி ராமன் விரும்பியதை அடுத்து தமிழில் திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

திருமணத்திற்கு பிறகு கர்ப்பமான மாக்ஸ்வெல் மனைவி வினி ராமனுக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ளது.

இதனை இந்திய முறைப்படி ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளன் மேக்ஸ்வெல் நடத்தியுள்ளார். தற்பொழுது இந்த வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
