ஒரு பெண்ணிற்கு இவ்வளவு வன்மமா…? 2 மாத பச்சிளம் குழந்தையின் காலை உடைத்த அத்தை…. வலியில் கதறிய பிள்ளை… கொந்தளிக்க வைக்கும் வீடியோ வைரல்…!!

By Devi Ramu on ஆடி 15, 2026

Spread the love

குடும்பத்திற்குள் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் பகை காரணமாக, ஒரு பெண் தனது அண்ணனின் பச்சிளம் குழந்தையின் காலை உடைத்துக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். பார்ப்பவர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைக்கும் இந்த அதிர்ச்சியூட்டும் அநாகரிகச் செயல், அந்தப் பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் பாதிக்கப்பட்ட குழந்தையின் அத்தை முறை. தனது சொந்தக் குடும்பப் பகையைத் தீர்த்துக் கொள்வதற்காக எவ்வித குற்றமும் செய்யாத ஒரு பச்சிளம் குழந்தையைக் குறிவைத்து இந்த வன்முறையை அரங்கேற்றியுள்ளார்.

https://twitter.com/Mariyam_MBD/status/2077186466393084079

   

எந்தவொரு தவறும் அறியாத ஒரு பிஞ்சுச் சிறு பிள்ளையிடம் ஒரு பெண் இவ்வளவு கொடூரமாகவும், இரக்கமின்றியும் எவ்வாறு நடந்து கொள்ள முடியும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களின் கடுமையான கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். மனிதநேயமற்ற இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த விபரங்கள் வெளியாகிப் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், சம்மந்தப்பட்ட அந்தப் பெண் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.