ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள குதா கோர்ஜி பகுதியில், 2 மாதமே ஆன பெண் குழந்தைக்கு அவளது சொந்த அத்தையே நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த அந்தப் பிஞ்சு குழந்தையின் காலை, அவளது அத்தை இரக்கமின்றி திருகி உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். குடும்பப் பகை மற்றும் பொறாமை காரணமாகவே அந்தப் பெண் இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் தாய், கடந்த சில நாட்களாகவே தன் குழந்தை தொடர்ந்து அழுது வந்ததால் சந்தேகமடைந்தார். குழந்தையின் உடலை ஆடைகளைக் களைந்து சோதித்துப் பார்த்தபோது, பல இடங்களில் நகக்கீறல்களும் காயங்களும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தன் கணவரின் சகோதரி மீது சந்தேகம் இருந்தபோதிலும், முறையான ஆதாரம் இல்லாததால் யாரையும் நேரடியாகக் குற்றம் சாட்ட விரும்பாத தாய், உண்மை என்ன என்பதைக் கண்டறிய ரகசியமாக அறையில் ஒரு கண்காணிப்பு கேமராவை பொருத்தினார்.
அறையில் கேமரா பொருத்தப்பட்டிருப்பதை அறியாத அந்த அத்தை, வழக்கம்போல குழந்தையைத் துன்புறுத்த உள்ளே நுழைந்தார். தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் காலை அவர் கொடூரமாகத் திருகி உடைக்கும் காட்சிகள் கேமராவில் அப்படியே பதிவாகின. இதன் மூலம் குழந்தையின் தாய் தன் நாத்தனாரை ஆதாரத்துடன் கச்சிதமாகப் பிடித்தார். உடனே இதுகுறித்து போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையைத் துன்புறுத்திய குற்றத்திற்காக அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…
நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…
சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…