சிறுமி தற்கொலையில் திடீர் திருப்பம்…! “அம்மா பிளீஸ் நான் ஸ்கூலுக்கு போகல.. எல்லாரும் கிண்டல் பண்ணுறாங்க… பெற்றோர் வெளியிட்ட பகீர் ஆடியோ..!

By Soundarya on கார்த்திகை 8, 2025

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சக மாணவர்கள் கிண்டலடித்த நிலையில், 9 வயது சிறுமி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஜெய்ப்பூர் அருகே செயல்பட்டு வரும்  தனியார் பள்ளியில், அமிரா (9) என்ற சிறுமி 6 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் அம்மாணவி நவ.1 ஆம் தேதி, பள்ளியில் உள்ள 4 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சக மாணவர்களின் துன்புறுத்தல் காரணமாக தங்கள் தங்கள் மகள் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். மேலும் ஊடகத்திற்கு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். அதில், “நான் பள்ளிக்கு செல்ல விரும்பவில்லை. தயவுசெய்து என்னை அனுப்ப வேண்டாம்” என சிறுமி  அழுகிறார்.