மக்களே உஷார்!… தமிழக விவசாயிகளுக்கு மெகா சர்ப்ரைஸ்..! 90% மானியத்தில் அதிவேக மின் இணைப்பு… அரசே வழங்கும் மாஸ் திட்டம்…!!

By Gayathri on ஆவணி 7, 2026

Spread the love

தமிழ்நாடு அரசு தாட்கோ மூலமாகப் பழங்குடியின விவசாயிகளின் நலன் கருதி 90 சதவீத மானியத்தில் துரித மின் இணைப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. 2026-2027 ஆம் நிதியாண்டில் நூறு விவசாயிகளுக்கு அதிவேக மின் இணைப்பு வழங்குவதற்காகச் சுமார் ரூ.2.33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியான பழங்குடியின விவசாயிகள், தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான newscheme.tahdco.com வாயிலாகத் தங்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்து பயனடையலாம் எனச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வேளாண் இயந்திரமயமாக்கும் திட்டத்தின் கீழ் விவசாயப் பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மானிய விலையில் அரசு வழங்கி வருகிறது. ஆட்கள் பற்றாக்குறையைப் போக்கி விவசாயத்தை விரைவுபடுத்தும் நோக்கில், பொதுப்பிரிவினருக்கு 50 சதவீத மானியமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்குக் கூடுதலாக 20 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவை ‘உழவர் செயலி’ மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும், கூடுதல் விவரங்களுக்குத் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை அணுகலாம் எனவும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

   

மேலும், அறுவடைக்குப் பின் ஏற்படும் தானிய இழப்பைத் தவிர்த்துப் பாதுகாப்பாக உலர்த்துவதற்காகக் கடலூர் மாவட்டத்தில் நெல்லடிக்கும் களம் அமைக்கும் சிறப்புத் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் சொந்த நிலத்தில் 10×10 மீட்டர் அளவில் சிமெண்ட் தளம் அமைக்கத் தேவைப்படும் மொத்த தொகையான ரூ.5.60 லட்சத்தில், 50 சதவீதம் அரசின் பின்னேற்பு மானியமாக நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். விருப்பமுள்ள விவசாயிகள் சிட்டா, அடங்கல், பான் அட்டை, வங்கிப் புத்தகம் மற்றும் இதர ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.