“யாராவது வாங்க, காப்பாத்துங்க”… வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்த கும்பல்… இரவில் தனியாக இருந்த பெண்களுக்கு நேர்ந்த சோகம்…!

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் சாணார்பாளையம் மலைப்பாம்படி பகுதியை சேர்ந்த லோகநாதன் கீதா தம்பதியினர் கடந்த 25 ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பகுதியில் வசித்து வருகின்றன. இந்த தம்பதிகளுக்கு சந்தியா, திவ்யா மற்றும் மீனா என்ற மூன்று பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் அனைவருக்கும் திருமணம் முடிந்து அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள். இதனிடையே கடந்த அக்டோபர் ஏழாம் தேதி இரவு 8.30 மணி அளவில் கீதாவின் கணவர் லோகநாதன் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலைக்கு சென்று விட்டார். தன்னுடைய பெரிய மகள் சந்தியாவின் இரண்டு பெண் குழந்தைகளையும் துணையாக அழைத்து திவ்யா தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று உறங்கியுள்ளார்.

அன்று நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டின் இரும்பு கேட்டை உடைக்கும் சத்தம் கேட்டது. உடனே வெளியே சென்ற திவ்யா, யாரு நீங்க என்ன பண்றீங்க என்று கேட்டு சத்தம் போட்டு உள்ளார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து சென்று விட்டது. மேலும் வெளியில் இருக்கும் சைக்கிளை திருட வந்திருக்கலாம் என்ற திவ்யா நினைத்துள்ளார். அரை மணி நேரம் கழித்து வந்த அந்த கும்பல் மீண்டும் இரும்பு கேட்டை உடைத்து கீழே தள்ளி உள்ளனர். இதனால் பதறிப் போன கீதா தன்னுடைய மூன்று மகள்களுக்கும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சீக்கிரம் வாங்க யாரோ கதவை உடைக்கிறார்கள் என்று கதறி உள்ளார்.

   

மேலும் யாராவது வாங்க காப்பாத்துங்க என்று கூச்சலிட்டு உள்ளார். அதற்குள் முகத்தை துணிகளால் மறைத்துக்கொண்டு மாஸ்க் மற்றும் தலையில் குல்லா அணிந்திருந்த அந்த கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே வந்து கீதாவின் கழுத்தை நெரித்து, உன்னை கொலை செய்து விடுவோம் மரியாதையாக வீட்டில் இருக்கும் பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொடு என்று மிரட்டி உள்ளனர். அங்கு உறங்கிக் கொண்டிருந்த இரண்டு பேத்திகளும் சத்தம் கேட்டு விழித்து அழ தொடங்கினர். உடனே கொள்ளையர்கள் கீதாவின் கழுத்தை நெரித்தவாறு வீட்டில் இருக்கும் நகைகள் மற்றும் பணத்தை தர சொல்லி மிரட்டினர். அப்போது கீதா, நாங்கள் கூலி வேலை செய்பவர்கள் எங்களிடம் எதுவுமே கிடையாது மருந்து மாத்திரை வாங்க கூட கஷ்டப்பட்டு வருகிறோம் என்று கேட்டு கெஞ்சியுள்ளார்.

   

அதற்குள் கீதாவின் மருமகன்கள், எதிர் வீட்டில் உள்ளவர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் கீதாவின் வீட்டின் முன்பு திரண்டனர். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து உடனே தப்பி சென்று விட்டது. பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தினர். அதே சமயம் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் கொள்ளையர்கள் அங்கிருந்த பகுதியில் சுற்றி பிரிந்தது தெரியவந்தது. இரவு நேரங்களில் யாராவது கதவை தட்டினால் கதவை திறக்க வேண்டாம் என போலீசார் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.