நடிகை ஸ்ரீதேவியின் சொத்துக்கு ஆபத்து…! போனி கபூர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

By Devi Ramu on ஆவணி 25, 2025

Spread the love

நடிகை ஸ்ரீதேவி தமிழில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இவருக்கு சொந்தமாக சென்னை ஈ.சி.ஆரில் சொத்து உள்ளது. இந்த சொத்துக்கு 3 பேர் உரிமை கேட்பதாக ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

போலியான வாரிசு சான்றிதழை பெற்று சொத்துக்கு உரிமை கோரும் 3 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை நடத்தி 4 வாரத்தில் தாம்பரம் தாசில்தார் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.