“காதலனுடன் அடிக்கடி உல்லாசம்…” 3 மகன்களுக்கு பயந்து உறவை முறித்த தாய்…. வாலிபரின் தொந்தரவால் தோப்பில் நடந்த பயங்கரம்….!!

Spread the love

போச்சம்பள்ளி அருகே மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(40). இவரது மனைவி  ஜானகி(38). இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்திய முருகன், 3 ஆண்டுகளுக்கு முன் உடல் நலக் குறைவால் இறந்தார். அதன் பின் ஜானகி தனது மூன்று மகன்களுடன் தனிமையில் வாழ்ந்து வந்தார்.

இதற்கிடையில், வேலைக்குச் சென்ற இடத்தில் 30 வயது ராஜதுரை என்பவருடன் ஜானகிக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. டிம்பர் லாரி ஓட்டுபவரான ராஜதுரை, அடிக்கடி ஜானகி வேலை பார்க்கும் இடத்திற்கு வந்து சென்றார். இந்தத் தொடர்பு படிப்படியாக திருமண வரம்பை மீறிய உறவாக மாறி இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக  இருந்தனர்.

இந்த நிலையில் ஜானகியின் மகன்கள் படிப்பை முடித்து சென்னைக்குச் சென்று வேலை பார்த்தனர். தாய் தனது காதலனுடன் ஊரில் சுற்றுவதை அறிந்த மகன்கள், ஜானகியிடம் விசாரித்தனர். இதனால் பயந்த ஜானகி, ராஜதுரையுடனான உறவை முடித்துவிட்டு மகன்களுடன் சென்னைக்கு வந்து வாழ்ந்தார். ஆனால் ஜானகியை பிரிய முடியாமல் ராஜதுரை அடிக்கடி தொலைபேசியில் அவரை தொடர்ந்து அழைத்து, கிராமத்திற்கு திரும்ப வருமாறு  தொந்தரவு செய்தார். இருப்பினும் ஜானகி சென்னையில் தங்கி வேலை செய்து வந்தார்.

சமீபத்தில் சொத்து விவகாரம் தொடர்பாக ஜானகி மகன்களுடன் சொந்த ஊருக்கு வந்தார். இதை அறிந்த ராஜதுரை, அவரை நேரில் சந்திக்க வற்புறுத்தினார். இதுகுறித்து ஜானகி தனது மகன்களிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மகன்கள் ராஜதுரையை கொலை செய்ய முடிவெடுத்தனர். அதன்படி சமாதானமாகப் பேசி, ராஜதுரையை  அருகிலுள்ள மாந்தோப்புக்கு அழைத்துச் சென்று சரமாரியாக வெட்டினர்.

இதில் படுகாயமடைந்த  ராஜதுரை அவர்களிடமிருந்து தப்பி, அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளைத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

என்னோட பேச மாட்டியா?… அதிகாலையில் வீடு புகுந்து இளம்பெண்ணை… மார்பில் கத்தியால் குத்திய கள்ளக்காதலன்… நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்…!

சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய கஸ்தூரி, கணவரைப் பிரிந்து தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து…

57 seconds ago

ஐயோ… 13 வயது சிறுமியை தனியாக அழைத்து பாலியல் அத்துமீறல்… அழுதுகொண்டே தாயிடம் கூறிய மாணவி… நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அருகே உள்ள கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள…

6 minutes ago

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

2 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

2 மணத்தியாலங்கள் ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

2 மணத்தியாலங்கள் ago