“ஷாக்… இரட்டை குண்டுவெடிப்பு…? பிரான்ஸ் அதிபரை கொல்ல முயற்சி…? சிரியாவில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

By Swetha on ஆடி 7, 2026

Spread the love

சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவரான பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் முதல்முறையாக சிரியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். சர்வதேச மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றி வரும் அவர், சிரிய அதிபர் அகமது அல்-ஷராவுடன் பேச்சுவார்த்தை நடத்த டமாஸ்கஸ் சென்றிருந்தார். இந்தச் சூழலில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அருகே செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை குறிவைத்தே இந்த கொலை முயற்சி தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த சமயத்தில் மேக்ரோன் அதிபர் மாளிகையில் சிரிய அதிபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்ததால், அவர் எவ்வித பாதிப்புமின்றி பாதுகாப்பாக உள்ளார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. வெடிகுண்டுகள் எவ்வாறு வைக்கப்பட்டன என்பது குறித்து சிரிய பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

   

பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போருக்குப் பின் சிரியாவின் அரசியல் சூழ்நிலை தற்போதுதான் மெல்ல சீராகி வருகிறது. இந்தச் சூழலில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த மேக்ரோனின் வருகையின் போது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் யாரேனும் உயிரிழந்தார்களா அல்லது காயமடைந்தார்களா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.