டேட்டிங் போனா கூட நடுவுல நான் தான் இருப்பேன்.. 20 வயசுல கல்யாணம் பண்ண காரணம் அதுதான்.. ஓப்பனாக பேசிய அட்டகத்தி ஹீரோயின்ஸ்..!!

By admin on ஆவணி 10, 2024

Spread the love

பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு அட்டகத்தி திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஒரு காட்சியில் திவ்யா நதியா என்ற கதாபாத்திரத்தில் இரண்டு பெண்கள் நடித்திருப்பார்கள். அவர்கள் உண்மையாகவே அக்கா தங்கை. அக்காள் ஷாலி. தங்கை சோபியா. இதில் சோபியா நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் மணிகண்டனின் மனைவி.

   

இவர் வள்ளி, கேளடி கண்மணி, அழகு உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அக்காவும் தங்கும் இணைந்து ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது அட்டகத்தி படத்திற்கும் முன்பே அஞ்சாதே என்ற திரைப்படத்தில் நானும் என் அக்காவும் சேர்ந்து நடித்திருந்தோம். அந்தப் படத்தில் ஸ்கூல் படிக்கிற பொண்ணுங்க மாதிரி நடிச்சிருப்போம். நானும் என் அக்காவும் சீக்கிரமாவே மேரேஜ் பண்ணிக்கிட்டோம். ஆனால் முதல்ல எனக்கு தான் கல்யாணம் நடந்துச்சு.

   

 

எனக்கு இப்ப 7 வயசுல ஒரு பையன் இருக்கான். என் கணவர் மணிகண்டனுக்கு கல்யாண வயசு வந்துருச்சு. இதனால் எனக்கு 20 வயசு இருக்கும் போதே நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனால் எங்க அக்கா அவ ஸ்கூல் நண்பரை தான் லவ் பண்ணா. என் அக்காவுக்கும் அவருக்கும் ஒரே வயது. அவருக்கு அப்போ கல்யாண வயசு வரல. அதனால என் அக்கா லேட்டா மேரேஜ் பண்ணிக்கிட்டா. என் பையன் பிறந்து 5 வருஷமா நான் வேலை பார்க்கல. இப்போ இரண்டு வருஷமா தான் சீரியல்ஸ்ல நடிச்சிட்டு இருக்கேன்.

சின்னத்திரையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணி சோபியா! – News18 தமிழ்

நானும் என் அக்காவும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி தான் இருப்போம். சொல்லப்போனால் லவ் பண்ண டைம்ல எங்க அக்கா டேட்டிங் போறப்ப கூட அவளுக்கும், அவருக்கும் நடுவுல நான் தான் உட்கார்ந்து இருப்பேன். ரெண்டு பேரும் அடிச்சு புடிச்சு சண்டை போடுவாங்க. நான் நடுவுல உட்கார்ந்து ஒன்னு பேசி தீர்த்துக்கோங்க. அப்படி இல்லன்னா பிரிஞ்சிடுங்கன்னு கோவத்துல சொல்லுவேன். அந்த அளவுக்கு நாங்க எல்லாரும் ரொம்ப க்ளோசா இருந்தோம் என பேட்டியில் கூறியுள்ளார்.

Actress Sofia New Traditional Photoshoot Stills